2025 ஜூலை 14, திங்கட்கிழமை

உனைஸின் செயற்பாட்டை வரவேற்கிறேன்: வட மாகாண சபை உறுப்பினர்

Kanagaraj   / 2014 டிசெம்பர் 19 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக்கின் நிலைப்பாட்டை நான் வரவேற்கின்றேன் என்று வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு போனஸ் ஆசன உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்தார்.

வவுனியா மாங்குளத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவ்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை மண்ணிலிருந்து குடும்ப ஆட்சி இல்லாது போகவேண்டும் என்பதற்காவும் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அதிகமான போராட்டங்களுக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதற்காகவும் அவர் ஆளும் தரப்பில் இருந்து எதிர்தரப்பிற்கு வந்துள்ளார்.

அவரின் முடிவை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் என்ற வகையில் நான் வரவேற்பதுடன் முடிவையும் பாராட்டுகின்றேன்.

அவருக்கு இருந்த பாதுகாப்புகளை தூக்கி வீசிவிட்டு மக்கள் நலனுக்காக மக்களின் நன்மைக்காக அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளார்.ஆகவே அவருக்கு நல்லிணக்கத்தை நேசிக்கின்ற, நீதியை நேசிக்கின்ற, சிறுபான்மை இனங்களின் நலன்கள் பாதுகாக்கப்படவேண்டும் என எண்ணுகின்ற அனைத்து தரப்பினருக்கும் ஆதரவளிக்கவேண்டியது கடமையாக மாறியிருக்கின்றது.

அந்தவகையில் நாமும் அவர் சாந்துள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு கை கோர்ப்பதற்கு அணிதிரண்டுள்ளோம்.
பெரும்பான்மை முஸ்லிம் கட்சிகள் இருந்தபோதிலும் மாங்குளம் மக்கள் தமிழ்த் தேசிக்கூட்டமைப்போடு நின்றவர்கள். ஆகவே நீங்கள் முன்மாதிரி மிக்க சமூகம் என்ற வகையில் பொதுவேட்பாளரை வெற்றி பெற செய்யும் முயற்சியில் பங்குதாரர் ஆகுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .