2025 ஜூலை 14, திங்கட்கிழமை

திருநெல்வேலியில் இளைஞர் குழு அட்டகாசம்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 21 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம், திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள வீடுகளின் மீது சனிக்கிழமை (20) இரவு கற்களை எறிந்தும் கதவுகளை காலால் உதைத்தும் இளைஞர் குழுவொன்று அட்டகாசம் செய்ததாக  அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளனர்.

அயலவர்கள் ஒன்றுகூடிய போது, அட்டகாசம் செய்த இளைஞர்கள் அவ்விடத்தில் இருந்த ஓடிவிட்டனர்.

119 இலக்கத்துக்கும் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கும் அப்பகுதி மக்கள் அறிவித்ததை அடுத்து, அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், பாதிக்கப்பட்டவர்களை ஞாயிற்றுக்கிழமை (21) காலை பொலிஸ் நிலையத்தில் புகார்செய்யுமாறு பணித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .