Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Gavitha / 2014 டிசெம்பர் 22 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா பாவக்குளத்தின் வான் கதவுகள் இன்று திங்கட்கிழமை (22) திறக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ரி.என். சூரியராஜா தெரிவித்தார்.
வவுனியாவின் பாரிய குளமான பாவக்குளத்தின் நான்கு வான் கதவுகளில் இரு கதவுகள் இன்று ஒரு அடி உயரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. 19.4 அடி கொள்ளளவை கொண்ட பாவக்குளத்தில் 20.1 அடி நீர் நிரம்பியுள்ளமையினால் ஒரு அடி உயரத்துக்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியாவின் தாழ் நிலப்பிரதேசங்களில் நீர் தேங்கியுள்ளதுடன், வவுனியாவின் அனைத்து குளங்களும் வான் பாய்ந்து வருகின்றது.
தற்போது நிலவிவரும் காலநிலையால், வவுனியா மாவட்டத்தில் 510 குடும்பங்களைச் சேர்ந்த 1,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் இடம்பெயர்துள்ளதாகவும் அவர்களுக்காக ஒரு தற்காலிக நலன்புரி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஓமந்தை கிராம சேவகர் பிரிவில் வேப்பங்குளம் கிராமத்தில் 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் நொச்சிமோட்டையில் 5 வீடுகளும் செட்டிகுளம் சூடுவெந்தபுலவில் 10 வீடுகளும் பன்றிக்கெய்த குளத்தில் 9 வீடுகளும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago