2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சிறுபான்மை சமூகங்களை அரவணைக்கும் ஜனாதிபதி வேண்டும்: மன்னார் ஆயர்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 25 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்;களை சேர்த்து அரவணைத்துக்கொண்டு செல்லக்கூடிய ஜனாதிபதி நாட்டுக்குத் தேவையெனவும், போர் முடிவுற்றும் மக்களுக்கு சுதந்திரம், சமாதானம் கிடைக்கவில்லையென மன்னார் ஆயர் இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தெரிவித்தார்.

நத்தார் தின (கிறிஸ்து பிறப்பு) நல்லிரவு திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் 'இயேசுவே ஆண்டவர்' மண்டபத்தில் வியாழக்கிழமை (25) அதிகாலை, மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலா நிதி இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

நல்லிரவுத் திருப்பலியயை தொடர்ந்து ஆயர் கருத்துக்கூறுகையில்,

அன்பும், அமைதியும் இலங்கைக்கு மட்டுமல்ல உலகுக்கும் தேவைப்படுகின்றது என்பதை இன்றைய கிறிஸ்து பிறப்பு எமக்கு தெரிவிக்கின்றது. இலங்கையில் போர் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் நாட்டுக்கும் எமது மக்களுக்கும் இன்னும் சுதந்திரம், சமாதானம் கிடைத்ததாக இல்லை.

யாழ்.இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தியை சந்தித்து கலந்துரையாடிய போது, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 5,000 வீடுகளே தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பது தொடர்பிலும், வடபகுதிகளில் வியாபித்திருக்கும் இராணுவப் பிரசன்னம் காரணமாக மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் இல்லாத நிலை குறித்தும் விவாதித்திருந்தோம்.

இவ்வாறானதொரு நிலையிலேயே இன்று நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தலை நாம் சந்தித்திருக்கின்றோம். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதொரு தலைமைத்துவம் இன்று தேவைப்படுகின்றது. இதற்காக நாம் இறைவனிடம் மன்றாட வேண்டும்.

நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்;களை சேர்த்து அரவணைத்துக்கொண்டு செல்லக்கூடிய தலைவர்கள் இன்று எமக்குத் தேவைப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .