2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ரிஷாத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2014 டிசெம்பர் 27 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத்


வாழ்வின் எழுச்சி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி வழங்கப்படுவதில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு  எதிராக, வவுனியா செட்டிகுளம் முதலியாகுளம் மக்கள், செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (26) ஆர்ப்பட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள், அமைச்சர் ரிஷாத் பதியதீனின் ஆதரவாளர்களுக்கும் முஸ்லீம் மக்களுக்குமே வழங்கப்பட்டதாகவும் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவில்லை என்றும் கோரியே இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான முறைப்பாடு செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி அனந்தன், வினோதரலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறித்த முறைகேடுகள் தொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலாளரிடம் வினவிய போது, திட்டத்தில் வழங்கப்பட்ட நிதி ஒரு வாரங்களுக்குள் பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தவறும் பட்சத்தில் ஊடகங்கள் கேட்டும் கேள்விகளுக்கு தான் பதில் கூறுதாகவும் கூறினார்.

 

You May Also Like

  Comments - 0

  • Tholan Saturday, 27 December 2014 11:19 AM

    என்னப்பா அநியாயம் இது அமைச்சுப் பதவி தமது அமைச்சுக்கு கீழ் இருந்த 18 திணைக்களங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த அமைச்சர் இந்த மக்களது பணத்தை தகுதியற்றவர்களுக்கு கொடுங்கள் என்று சொல்லமாட்டார் என்பது எல்லோரும் அறிவார்.ஆனால் இந்த சில எம்பிக்களுக்கு இதே பிழைப்பா போச்சு ..தங்களுடைய பெயர் மரணித்துவிட்டால் இப்படி திருகுதாளங்களில் ஈடுபடுவது வழமை,அய்யா அமைச்சர் அவர்களே தமிழ் உங்களின் நண்பர்கள்..நீங்கள் ஏன் இந்த காட்டிக் கொடுப்பார்களுக்கு பயப்படுகின்றீர்கள்.வாழ்க உங்கள் பணி அய்யா றிசாத்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .