2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முத்தையன்கட்டுக்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளன

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகிய முத்தையன்கட்டுக் குளத்தின் வான்கதவுகள் திங்கட்கிழமை (29) காலை 7 மணிக்கு திறந்துவிடப்படவுள்ளதாக முத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தார்.

முத்தையன்கட்டு நீர்ப்பாசனக் குளத்தின் கீழுள்ள 6 குளங்களில் ஏற்கனவே வான் பாய்ந்து வரும் நிலையில், முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டம் தற்போது 20 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு நாட்களாக சராசரியாக 57 மில்லிமீற்றர் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் குளத்தின் நீர்மட்டம் திங்கட்கிழமை (29) காலைக்குள் 21 அடியாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் முத்தையன்கட்டு குளத்தின் 2 வான் கதவுகளையும் திறந்து விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்படும் போது, வான் பாயும் பிரதேசங்களான வசந்தபுரம், மல்லாககண்டல், மற்றும் கன்னுத்திரபுரம் ஆகிய இடங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு, அனர்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, முத்தையன்கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள தண்ணிமுறிப்பு குளத்திலும் நீர்மட்டம் 20 அடி 9 அங்குலமாக காணப்படுகின்றது. இந்த குளத்தில் வான் கதவுகளும் திறக்கவேண்டிய தேவையுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முத்தையன்கட்டு குளத்தின் கீழுள்ள தட்டமலை, விஸ்வமடு, கணுக்கேணி, உடையார்கட்டு, மருதமடு, மடவாளசிங்கம் ஆகிய குளங்கள் ஏற்கனவே வான் பாய்;ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .