2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வவுனியா மக்கள் நலன்புரி நிலையங்களில் தஞ்சம்

Gavitha   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, 1,153 குடும்பங்களைச் சேர்ந்த 4,363 பேர், 36 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.என். சூரியராஜா ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 20 நலன்புரி நிலையங்களில் 504 குடும்பங்களைச் சேர்ந்த 1,947 பேரும் செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் 16 நலன்புரி நிலையங்களில் 649 குடும்பங்களைச்  சேர்ந்த 2,416 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா பிரதேச செயலகப்பிரிவில், 5,762 குடும்பங்களைச்  சேர்ந்த 21,031 பேரும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில், 291 குடும்பங்களைச் சேர்ந்த 959 பேரும் வவுனியா தெற்கு பிரதேச செயலகப்பிரிவில் 625 குடும்பங்களைச் சேர்ந்த 2,222 பேரும் செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் 2,362 குடும்பங்களைச் சேர்ந்த 8,524 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, 92 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 282 வீடுகள் பகுதியளிவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே இனிவரும் காலப்பகுதியில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .