2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் மக்களுக்கு நிவாரணம்

George   / 2015 ஜனவரி 07 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்  

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக 93 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் செலவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட வரட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்குவதற்காக 60 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.  
எதிர்காலத்தில் வரட்சிகள் ஏற்படும் நிலை காணப்படுவதால் அதனை எதிர்கொள்ளும் வகையில், தலா 50 ஆயிரம் ரூபாய் செலவில் 60 பொதுக்கிணறுகள் ஆழமாக்கப்பட்டுள்ளன.  

3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் வரட்சிகால குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யவென 2 தண்ணீர் பவுசர்களும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .