2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தென்னங்கன்றுகள் விநியோகம்

George   / 2015 ஜனவரி 07 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 6 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளையுடைய குடும்பங்களுக்கு தலா 02 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த போர் காலத்தில் பல்லாயிரக்கணக்கான தென்னைமரங்கள் அழிவடைந்தன. தற்போதுள்ள தென்னைகளும் போரின் போது சேதமடைந்ததன் காரணமாக தெங்குச் செய்கையாளர்கள் உரிய பயன்களை பெறமுடியாத நிலைமை உள்ளது.    

கிளிநொச்சி மாவட்டத்தின் தேங்காயின்  தேவை கடந்த காலங்களில் நிறைவு செய்யக்கூடிய நிலையிருந்தபோதிலும், தொடர்ச்சியாக தென்னைமரங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாக தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்துக்கு தேங்காயைக்கொண்டுவர வேண்டிய நிலைமை சிலவேளைகளில் ஏற்படுகின்றது.  

கிளிநொச்சி மாவட்டத்தில் தெங்குச் செய்கையை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் மாவட்டத்தினுடைய தெங்குச் செய்கை மேம்படுவதற்கான ஊக்குவிப்புகளை, தன்னார்வு அமைப்புகள் வழங்கவேண்டுமெனவும் சுகாதார பணிமனை வேண்டுகோள் விடுத்தது.  

அதற்கமைய சுகாதார பணிமனைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கிளிநொச்சி சுகாதார பணிமனை ஊடாக 314 தென்னங்கன்றுகள் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .