Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜனவரி 22 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பற்று பிரிவுக்கு பிறப்பு, இறப்பு, விவாகப்பதிவாளர் மிக விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவிப் பதிவாளர் சி.கிசாந்த், வியாழக்கிழமை (22) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
இயக்கச்சி பிரதேசத்தையும் உள்ளடக்கி முள்ளிப்பற்று பிரதேசத்தில் பதிவாளர் நியமனம் செய்யப்படுவதன் மூலம், இந்தப் பிரதேசங்களில் மக்களின் ஆவணப்பதிவுகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
பதிவாளர் பதவிக்கு 20 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் பொருத்தமான ஒருவரை நேர்முக பரீட்சையின் மூலம் தெரிவு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .