Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 24 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கள்ளக்காதலனுக்காக 10 மாதம் சுமந்து பெற்ற இரு குழந்தைகளையும் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்காக, காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட குன்றத்தூர் அபிராமி, கை விரல் நகங்களில் நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டு கவலையே இல்லாமல் வந்திருந்ததை ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது.
கோர்ட்டுக்கு வந்த அபிராமி, கருப்பு நிற சுடிதார் அணிந்துக் கொண்டு வந்திருந்தார். முகத்தை மறைப்பதற்காக கருப்பு நிற துப்பட்டாவை முகத்தில் கட்டியிருந்தார். தீர்ப்பு என்ன வரும் என்பதை அறிய பதற்றமாகவே இருந்தார். அவ்வப்போது அவர் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார்.
இந்த நிலையில் "குழந்தையை பராமரிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் தாயே, சுயலாபத்திற்காக இப்படி கொலை செய்துள்ளது கொடூரம்" என குறிப்பிட்ட காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், அபிராமியும், சுந்தரமும் குற்றவாளிகள் என அறிவித்தார்.
சாகும் வரை ஆயுள்
மேலும் இருவருக்குமான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் சாகும் வரை ஆயுள் சிறை என அறிவித்தார். நீதிபதி செம்மல் அறிவித்தாலும் அறிவித்தார், அபிராமி குலுங்கி குலுங்கி அழுதார்.
பெஞ்சில் அமர வைத்த காவலர்கள்
அவரை அங்கிருந்த காவலர்கள் ஒரு பெஞ்சில் அமர வைத்தனர். அப்போது பெண் காவலர் மீது சாய்ந்தபடியே அழுதார். பெண் காவலர்களும் மனிதாபிமான அடிப்படையில் அவரை தேற்றினர். அவருக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்தனர். அது போல் சுந்தரமும் கதறி அழுதார். அவரை ஆண் காவலர்கள் தேற்றினர்.
மனிதாபிமானம்
இருவரும் கொடூர குற்றவாளிகளாக இருந்தாலும் அந்த இடத்தில் போலீஸாரின் மனிதாபிமானம் பெரிதும் பேசப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, அபிராமி தலையை கீழே குனிந்தபடியும் முகத்தை மூடியபடியும் அழுத போது ஒரு விஷயத்தை கவனித்தீர்களா?
தலையில் கிளிப்
தலையில் டிக்டாக் கிளிப் இரண்டு அணிந்திருந்தார். இரு பக்கமும் காதோர முடியை சிறிதளவு எடுத்து அதை நடுமண்டையில் கிராஸ்ஸாக பிடித்து இந்த கிளிப்புகளை செருகி pony tail போட்டிருந்தார். அது போல் அவரது கை விரல் நகங்களில் nail polish பூசப்பட்டிருந்தது.
சிறையில் சோதனை
பொதுவாக சிறைச்சாலைக்கு செல்லும் ஆண், பெண் என தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என இருந்தாலும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அது போல் அவர்கள் சிறையில் அசம்பாவிதங்களில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதற்காக அவர்களை முற்றிலும் சோதனையிட்டுத்தான் சிறைக்குள் அனுப்புவார்கள்.
நகப்பூச்சு
குற்றம் செய்துவிட்டதை நினைத்து, கூர்மையான ஆயுதங்களை கொண்டு, தங்களை தாங்களே வருத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக இது போன்ற நடவடிக்கை உள்ளது. அப்படியிருக்கும் போது விஷத்தன்மை கொண்ட நகப்பூச்சுகளை (nail polish) அபிராமி வைத்துக் கொண்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூர்மையான கிளிப்
அது போல் டிக் டாக் கிளிப்பின் அடிபாகம் கூர்மையாக இருக்கும். அதையும் அவர் எப்படி அணிந்திருந்தார் என தெரியவில்லை. கையில் பளபளவென நெயில் பாலிஷ், தகதக என மின்னும் கிளிப்புடன் இவர் வந்ததை பார்த்தால் குழந்தைகளை கொன்றதற்கான குற்ற உணர்ச்சியே இவருக்கு இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
எல்லாம் நடிப்பா
அது போல் இவர் முகத்தை மூடிக் கொண்டு அழுததெல்லாம் நடிப்பா என்றும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது. எதுவாக இருந்தாலும் விஷத்தன்மை கொண்ட நெயில் பாலிஷுக்கு சிறைக்குள் அனுமதி இருக்கிறதா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதே வேளை, கைகளில் வளையல், காதுகளில் தோடு இல்லாமல் இருந்தார் அபிராமி. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .