Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 14 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
யாழ்ப்பாணம் றோட்டறி கழகம் மற்றும் றோட்டறி மாவட்டம் 3220.3230.3202 ஆகியன இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் 100 பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தையல் இயந்திரங்களும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 100 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (14) 9 மணிக்கு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண றோட்டறி கழக தலைவர் எஸ்.அனுராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராலிங்கம், ஈ.சரவணபவன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், அன்ரனி ஜெகநாதன் மற்றும்; வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் மேரி கமலா குணசீலன் ஆகியோர் கலந்துகொண்டு தையல் இயந்திரங்களையும் கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைத்தனர்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 400 தையல் இயந்திரங்கள் வழங்கவுள்ளதாகவும் இன்றுடன் 300 தையல் இயந்திரங்கள் வழங்கியுள்ளதாகவும் மீதி 100 தையல் இயந்திரங்களும் விரைவில் வழங்கவுள்ளதாகவும் யாழ்ப்பாண றோட்டறி கழக நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.நிமல்சன் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago