Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 19 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கொத்துக்குண்டுகள், எறிகணை வீச்சுக்களில் எமது பிஞ்சுகள் குலை, குலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்;தப்பட்டு அவர்களின் உடல்களில் சிந்திய குருதியினால் சிகப்;பேறிய மண்ணில் தான் இன்று கட்டடங்கள் கட்டித் திறக்கப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி, மலையாளபுரம் அன்மை சாரதா வித்தியாலயத்தில் 6.2 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்;டடத் தொகுதியை வியாழக்கிழமை (18) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது,
'1977ஆம் ஆண்டு மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இனக்கலவரங்களால் மலையகப் பகுதிகளிலி;ருந்து இடம்பெயர்ந்து வந்த மிகப்பெருமளவான மக்கள் கிளிநொச்சி, மலையாளபுரம் பாரதிபுரம், கிருஸ்ணபுரம், ஆகிய பகுதிகளில் குடியமர்ந்தனர். இவர்களுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாரதிபுரத்திலே பாரதி வித்தியாலயம் என்ற பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆயிரம் பாடசாலைத் திட்டத்தின் கீழ் அதனுடைய ஆரம்பப்பிரிவு தனி அலகாக இயங்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆரம்பப் பிரிவை வேறொரு இடத்தில் தனியாக இயங்கும் வகையிலேயே குறித்த பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.
2006 தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இப்பகுதியில் 120 பாடசாலைப்; பிள்ளைகள் கொத்துக்;குண்டுகள்; மூலமாகவும் எறிகணைகள் மூலமாகவும் கொன்று குவிக்கப்பட்டனர். 200 பிள்ளைகள் தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்தவர்;களாகவுள்ளனர். 30 க்கு மேற்பட்ட சிறுவர்களின் நிலை என்னவென்று தெரியாது.
கொத்துக்குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிள்ளைகள் குலை குலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்;பட்டு அவர்களில் உடலில் சிந்திய இரத்தத்தினால் சிகப்பேறிய மண்ணில் தான் இன்று 150 அடி நீளத்தையும் 25 அடி அகலத்தையும் கொண்ட ஆறு வகுப்பறைகள், அதிபர் அலுவலகம், கணிணி அறை என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.
பாடசாலை முதல்வர் நா.கணேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்; ஆகியோர் கலந்துகொண்டனர்.
28 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago