2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

போக்குவரத்து வசதியின்மையால் நடந்து செல்லும் மக்கள்

Princiya Dixci   / 2015 ஜூன் 22 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்துக்கு போதிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் வைத்தியசாலை உள்ளிட்ட தேவைகளுக்காக மக்கள் நடந்து சென்று வருகின்றனர் என முட்கொம்பன் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்தக் கிராமத்தினூடாக கிளிநொச்சி நோக்கி காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. ஆனால், இடைப்பட்ட நேரத்தில் எவ்வித பஸ்களும் சேவையில் ஈடுபடுவதில்லை.

முட்கொம்பன் கிராமத்திலிருந்து 20 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பூநகரியின் மருத்துவமனை, பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு பயணிப்பதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால், 10 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள அக்கராயன் மருத்துவமனைக்கு மக்கள் நடந்து சென்று வருகின்றனர். 530 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்துக்கு மேலதிக போக்குவரத்துச் சேவைகள் நடத்தப்படவேண்டும் என அபிவிருத்திச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .