2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மன்னார் மீனவர்களின் கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிப்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 22 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் தற்போது கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்து வருவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கரையோரப்பகுதிகளில் கடந்த மே மாதம் முதல் பருவக்காற்று மிக வேகமாக வீசி வருகின்றமையினால் மீனவர்களின் கடற்தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளாந்தம் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறித்த பருவக்காற்றை மீனவர்கள் 'சோளக்காற்று' எனக் கூறுகின்றனர். குறித்த பருவக்காற்று மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான சுமார் 06 மாதங்கள் வரை கடல் சார் கரையோரப்பிரதேசங்களில் வீசும்.

இதனால் குறித்த 06 மாத காலங்களிலும் மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகள் பாதிப்படையும்.
இதனால் ஆழ்கடலுக்குச் செல்வதை குறைத்து கரவலை தொழிலை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .