Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 23 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி, இரணைமாதா நகரிலிருந்து இரணைதீவுக்கு கடந்த சனிக்கிழமை (20) 2 படகுகளில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இயந்திரக் கோளாறு காரணமாக இரணைதீவு சின்னத்தீவுக்கருகில் பழுது பார்த்துக்கொண்டிருந்த போது, அவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டமையானது கண்டிக்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் குறிப்பிட்;டுள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் இது தொடர்பில் என்னிடம் முறையிட்டனர் கடற்றொழிலுக்குச் செல்வதில் தாங்கள் அச்சமுடன் காணப்படுவதாக அந்தப் பிரதேச கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கடற்றொழிலாளர்கள் தங்கள் தொழில் நடவடிக்கைகளை தங்குதடையின்றி தமது கடற்பரப்புக்குள் மேற்கொள்ள வேண்டும். இந்த நிலையில் இவ்வாறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வரும் கடற்றொழிலாளர்களை கடலில் வைத்து கடற்படையினர் அச்சுறுத்துவது, தாக்குதல் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடியாகவே கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு தெரியப்படுத்தவுள்ளேன். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது கடற்றொழிலாளர்களின் தொழில் மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரகுமார் கூறினார்.
இரணைதீவைச் சேர்ந்த மக்கள், இரணைதீவை கடற்படையினர் சுவீகரித்து வைத்துள்ளமையால் தற்போது இரணைமாதா நகரில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago