2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

என் காணி எனக்கு வேண்டும்; கூரையில் ஏறி முதியவர் போராட்டம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தனக்கு சொந்தமான காணியை தன்னிடம் வழங்குமாறு கோரி, முதியவர் ஒருவர் வவுனியா தெற்கு பிரதேச செயலக கட்டிடமொன்றின் கூரையின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

வேவத்தகே விக்கிரமசூரிய என்ற முதியவரே இன்று புதன்கிழமை (24), இந்த போராட்டத்தை முன்னெடுத்தார்.

வவுனியா, நெடுங்குளம், மினிமறிச்சகுளம் பகுதியில் தனது தந்தைக்கு ஒரு ஏக்கர் வயல்காணி இருப்பதாகவும் அந்த காணி, அவருக்கு பின் தனக்கு கிடைக்கும் என உறுதியில் எழுதப்பட்டுள்ளதாகவும் அக்காணிக்குரிய ஆவணங்கள் தன்னிடம் உள்ள போதும் அதனை வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தினர் வேறு ஒருவருக்கு வழங்கியுள்ளனர் என போராட்டத்தில் ஈடபட்டுள்ள முதியவர் கூறினார்.

தனது காணியை மீட்டுத்தருமாறே தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அம்முதியவர் மேலும் கூறினார். எவ்வாறாயினும், இந்த முதியவரின் குற்றச்சாட்டு பொய்யானது என பிரதேச செயலக ஊழியர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .