Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 24 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
பளைப் பொது விளையாட்டு மைதான திறப்பு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார்.
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானம், 10 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இன்று புதன்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இந்த மைதானத்தை திறந்து வைத்தார். மைதான திறப்பு நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றும்போது, அதற்கு ஆனந்தசங்கரி மறுப்பு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சங்கரி அங்கு கருத்து தெரிவிக்கையில், 'தேசிய கொடியை இதுவரை நான் எந்தவொரு நிகழ்விலும் ஏற்றவில்லை. அதற்காக தேசிய கொடியை அவமானப்படுத்துகின்றேன் என்று கருதக்கூடாது. தேசிய கொடியை ஏற்றக்கூடிய காலம் வரும்' என்றார்.
'நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமாதானத்தை குழப்பும் வகையில் பல்வேறு கருத்துக்கள் மாணவர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர்' என அவர் மேலும் கூறினார்.
பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு அண்மையில், வசதிகள் குறைந்த நிலையில இருந்த இந்த மைதானத்தை புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைத்தனர். மக்களின் கோரிக்கையை அடுத்து நெல்சிப் திட்டத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் கீழ் மைதானம் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago