2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

246 பேருக்கு கௌரவிப்பு

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள், வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தெரிவித்தார். 

இந்நிகழ்வு, ஒட்டுசுட்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில், இன்று (23) நடைபெறவுள்ளது. 

 இதன்போது, பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, வீட்டுத் தோட்டம், தேனீ வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்ட 246 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர்.  

கௌரவிக்கப்ப டவுள்ளவர்களுக்கு ஐந்து புதிய வகை மரக் கன்றுகளும் இதன்போது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .