2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘463 வாக்காளர்களுக்கு புத்தளத்தில் வாக்களிப்பதற்கு ஏற்பாடு’

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமானக் காரணங்களுக்காக, தமது சொந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியாத 463 வாக்காளர்களுக்கு, புத்தளத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவென, முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கா. காந்தீபன் தெரிவித்தார்.

இந்த 463 பேரும், புத்தளத்தில் வாக்களிப்பதற்கான விண்ணப்பத்தைத் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்ததன் அடிப்படையிலேயே, அவர்களுக்கு புத்தளத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவெனவும், அவர் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள், இன்று (30) அஞ்சல் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து,  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .