2025 ஜூலை 14, திங்கட்கிழமை

80பேரை எரியூட்ட மண்ணெண்ணெய், டீசல் பயன்படத்தப்பட்டுள்ளது: தடய ஆய்வில் தகவல்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 04 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், இந்திமடு மற்றும் சமளன்குளம் ஆகிய பகுதிகளில் வைத்து கடந்த 2006ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 80பேரையும் எரியூட்டுவதற்கு மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தடய ஆய்வுகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

இந்திமடு பகுதியில் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட தடய ஆய்வு விசாரணைகளின் போதே இந்த தகவல் கிடைத்ததாக விசாரணைகளில் ஈடுபட்டுவரும் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், புதன்கிழமை (03) சமளன்குளம் பகுதியில் தொடர்ந்தும் தடய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சமயன்குளம் காட்டுப் பகுதிக்கு முதலில் சென்ற இராணுவத்தினரின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர், அங்கு கண்ணிவெடிகள் இல்லை என்ற உறுதி செய்ததை அடுத்தே தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று தடய ஆய்வுகளை மேற்கொண்டனர்.

கல்கிஸை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயரத்னம், இராணுவ அதிகாரி லக்கி உள்ளிட்ட 30பேர் முதற்கட்டமாக இந்திமடு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யது  எரியூட்டப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, மேலும் 50பேர் பாரவூர்திகள் மற்றும் பஸ் ஆகியவற்றில் அழைத்துச்செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாக தடுப்பிலுள்ள போராளிகள், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பிரகாரம், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எரியூட்டப்பட்ட இடங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் முதற்கட்டமாக கடந்த நவம்பர் 19ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், மேற்படி இடங்களைச் சென்று பார்வையிட்டார்.

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், தடயவியல் நிபுணர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், நிலஅளவையாளர், குற்றப்பதிவு திணைக்களம், இரசாயன பகுப்பாய்வு பிரிவு, நச்சுத்தன்மை தொடர்பான சட்ட வைத்தியதிகாரி, ஜெயவர்த்தன, இராஜரட்டை பல்கலைக்கழகங்களில் தடயவியல் தொடர்பான கற்கைநெறி கற்கும் மாணவர்கள் என 9 பிரிவுகளைச் சேர்;ந்தவர்கள் தடயவியல் ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இந்த தடயவியல் ஆய்வு மற்றும் விசாரணைகள் தொடர்;ந்து 5 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளன. விடுதலைப் புலிகளின் அல்பா 5, அல்பா 2 தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .