2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 96 வாக்களிப்பு நிலையங்கள்

George   / 2015 ஜனவரி 07 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நாளை 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 96 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஆர்.சி.அமல்ராஜ் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 79 ஆயிரத்து 86 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் சிறிய தேர்தல் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், பெரியளவில் எதுவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையென அவர் மேலும் கூறினார்.  

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .