Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 23 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி , பளை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிளாலி பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் சிக்கிய O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவியும் , அவரது தாயும் வீட்டுத்தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர். மாணவி தோட்டத்திலுள்ள பனை மரத்தடிக்கு அருகில் சுத்தம் செய்த போது பூமிக்கு அடியில் இருந்து ஏதோ ஒரு பொருள் வெடித்துச் சிதறியதால் மாணவி காயமுற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து மாணவியை உடனடியாக பளை வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடி விபத்தில் மாணவியின் ஒரு கால் கணுக்காலுக்குக் கீழ் கடுமையான காயங்களுக்கு உள்ளானமையால் மாணவி கணுக்காலுக்கு கீழ் காலை இழந்துள்ளதாக கூறப்பட்டுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
9 hours ago