2025 மே 21, புதன்கிழமை

‘OMP அலுவல திறப்பு விழாவுக்கு அரசியல்வாதிகள் போகக் கூடாது”

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

யாழ்ப்பாணத்தில், நாளை மறுதினம் (24) திறக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிராந்திய அலுவலகத் திறப்புக்கு, தமிழ் மக்களின் அரசியல் பிரதிதிநிதிகள் எவரும் துணை நிற்ககூடாதென கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள அவர்களது அலுவலகத்தில், இன்று (22) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர்,  வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை எதிர்த்து வருவதாகவும் இந்த நிலையில் நாளை மறுதினம் (24) யாழ்ப்பாணத்தில் அதன் பிராந்திய அலுவலகம்  திறக்கப்படுவது தமக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த அலுவலகம் திறப்பு விழாவுக்கு தமிழ் அரசியல்வாதிகள் எவராவது சென்றால்,  முதலில் அவர்கள் தங்களது உறவுகளுக்குப் பதிலை வழங்கிவிட்டு செல்ல வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன்,  இம்மாதம் 30ஆம் திகதியன்று, வவுனியா - ஓமந்தையில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மாபெரும் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .