2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அந்தஸ்து கடவுள் முன் செல்லாது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வணக்கஸ்தலங்களில் சிலர் அழையா விருந்தினர்கள் போல உள்நுழைந்து, அடாவடித்தனமான கட்டளைகளை மக்கள் மீது திணிப்பார்கள். சம்பந்தப்பட்ட தலங்கள், அல்லது நிறுவன சபையின் உறுப்பினர்கள் இதனைக் கண்டுகொள்வதில்லை. 

சில சமயங்களில் இந்த மு​காமைத்துவக் குழு உறுப்பினர்களும் சர்வாதிகாரிகள் போல செயற்படுவதுண்டு.  

இறைவன் பொதுவானவன். அவரை வணங்கும் புனித பூமியும் பொதுவானதே என இங்கு வந்து, தங்கள் மன அழுக்கைக் கொட்டுவது என்ன நியாயம் ஐயா? கோவிலுக்குள் வந்தால் எல்லோரும் சமன்தான். இங்கு எந்தத் தலைவருக்கும் முன்னு​ரிமை அளிப்பது மகாபாவம். இதனை ஏற்பவருக்கும் இந்தப் பாவம் சேரும்.  

மௌனமாக வந்து, மௌனமாக இறைவழிபாடு செய்வதே உத்தமம். பதவி, பொருள், கௌரவம், அந்தஸ்து கடவுள் முன் செல்லாது. இறைவன் விரும்பாததை நல்லோர் பணிவுடன் புரிந்து ஒழுகுவார்கள். 

 

வாழ்வியல் தரிசனம் 29/12/2016

பருத்தியூர் பால – வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .