Princiya Dixci / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எத்தனை கோடானுகோடி உயிரினங்கள் இருப்பினும், அவை ஒவ்வொன்றும் புதுப்புது வார்ப்புகள். ஹே, இறைவா! எதனைப் படைத்தாலும் நீ உன் கைங்கரியத்தினை, ஆழுமையினை, கலை நுட்பத்தை இம்மியளவும் பிசகாமல் எங்ஙனம் சிருஷ்டிக்கின்றாய்?
எமக்கு மிகச்சிறிய கருமங்களைக்கூடச் சிறப்பாகச் செய்ய, எவ்வளவு கால அனுபவம் தேவைப்படுகிறது. எங்களை கணப்பொழுதும் எப்படி செதுக்கிக்கொண்டே இருக்கின்றாய்? ஆஹா, பெருமானே! நீயே பெரும் சிற்பி. நீயோ எழுதுவதுமில்லை; படிப்பதுமில்லை. ஆனால், இந்தப் பேரண்டத்தையே ஆட்சி செய்கின்றாய்; அசைக்கின்றாய்.
உண்மையின் ஊற்றே எமது சிற்றறிவை விசாலமாக்கும்.
வாழ்வியல் தரிசனம் 09/02/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .