2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

குற்றம் களைந்த வாழ்வே இறை தரிசனம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லோரிடத்திலும் கடவுள் இருக்கின்றார். ஆனால், அவரை வெளிப்படுத்தி உணர்ந்து, சூவீகாரம் செய்வதற்குத் தடையாக அமைவது, மனிதரின் தவறுதான். 

அற்பமான விடயங்களுக்கே சந்தேகம் கொள்ளும் மனிதன், ஆழமான சங்கதிகளை எவ்வாறு நம்பப் போகின்றான். 

காணாத பொருள் உள்ளே இருக்கும் பொருள் என்றால், கண்டுகொள்வது எப்படி? நம்பிக்கையற்ற வழிபாடுகளால் பிரயோசனம் இல்லை. பக்தனுக்குள் பிரவாகிக்கும் நெஞ்சத்துப் புழகாங்கிதம், அவனுக்கே தெரியும் அற்புத ஸ்பரிசமாகும். பக்தர்களை பித்துப் பிடித்தவர்கள் போலானவர்கள் என்றும் சொல்வார்கள். பக்திப் பரவசப்படும் மானுடர்கள் அடுத்த சில நிமிடங்களில் சாதாரண நிலைக்கு வந்தவுடன் எல்லாமே மறந்து பழையபடி, பாவம் செய்யவும் தலைப்படுகின்றனர். 

இந்த நிலை அறுந்து என்றும் சாஸ்வதமான தெளிவுடன் இறைபக்தி உருவாக்க முனைதல் பிறவிக் கடமையாகும். குற்றம் களைந்த வாழ்வே இறை தரிசனத்துக்கு ​மேன்மை தரும்.  

வாழ்வியல் தரிசனம் 05/12/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .