2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

பழைமையில் பொதிந்துள்ள புதுமைகளைக் கற்றுணர்க!

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழக்கத்தை உடைப்பதால் சில சமயங்களில் பிரச்சினைகள் உருவாகி விடுகின்றன. ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் பலவற்றை, எங்கள் முன்னோர்கள் மறைமுகமான வழிகள் மூலம் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் பல எமது தேகசுகாதாரம் தொடர்பானவையாகும். 

 

தியானம், யோகாசனம், சூரியவணக்கம், ஆலயக் கிரியைகள், உபவாசங்கள் எனப் பலவழிமுறைகள், பலவித வடிவங்களில் சமயங்களூடாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. 

பெரியோர்கள் சொல்லும் விடயங்கள் எமக்குக் கேலியாகக்கூட இருக்கலாம். ‘குறுக்கு வழியில் போகாதே; தனி வழியில்போகாதே’ என்பது போன்ற அறிவுரைகள் மனிதரைத் தீய வழியில் செல்லாதிருக்கச் செய்யும் மணிமொழிகள். 

பழங்கதை பேசக்கூடாது எனும் இளைஞர்கள், பழைமையில் பொதிந்துள்ள புதுமைகளைக் கற்றுணர்க! 

 

வாழ்வியல் தரிசனம் 31/01/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X