Princiya Dixci / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அந்த நாள் நினைவுகளில் மனம் நனைகிறது. எங்கும் பச்சை வண்ணக் கிராமங்களில், வீட்டு வளவுகளில் நெடிதுயர்ந்த பனை, தென்னை, மா, பலா, வாழை மரங்கள் நிறைந்திருந்தன. இவையே எமது கிராமங்களின் அரண்களாயின.
வசந்த காலத்தில் விடியவிடியக் கூத்து, இசைக் கச்சேரிகள், கலை, விளையாட்டு நிகழ்வுகள் கோவில்களில் நடைபெறும். மக்கள் கோவில் வீதிகளில், ஓலைப்பாயில் ஒய்யாரமாக இருந்து இரசனையுடன் இவற்றினைப் பார்ப்பார்கள்.
இன்றோ சுட்டெரிக்கும் இரவுகளாகி விட்டன. பனை, தென்னை ஓலைகளால் வேய்ந்த மண்வீடுகளைப் போல், குளிர்சாதனம் பொருத்திய வீடுகள் ஈடாகுமா? அந்தக் குளுமைமிகு இன்ப இராச்சியம் எங்கே போயிற்று? எங்கள் உயிர்த்தாவரங்களும் வனப்பும் வாழ்வும் சரித்திரம் போலாயிற்று. அது நிஜம் என்று புதிய தலைமுறை நம்புமா?
மனித மனங்கள் சூரிய வெப்பத்தைவிட, அதிகமாகக் கொதித்துக் கொண்டிருக்கின்றது. இயற்கையைத் தொலைத்து அரசியலால் அல்லாடும் இனம் நாம்.
வாழ்வியல் தரிசனம் 08/02/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .