2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

மருதாணி இடுமுன்னர் சிந்தியுங்கள்

A.P.Mathan   / 2010 ஜூலை 26 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(ஆர்.சுகா)

இன்று மணப்பெண் முதல் சாதாரண பெண்கள் வரையில் கைகள் மற்றும் கால்களிலும் மருதாணிக் கோலம் போடுவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.

திருமணக் கொண்டாட்டத்தின்போது மணப்பெண்ணுக்கு மணமகனின் வீட்டார் வந்து கைகளில் மருதாணியிடுவது என்றதொரு சடங்கு முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்றது.

முன்னர் மருதாணி பசையானது இயற்கையான முறையில் தாயாரிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவை செயற்கையான முறையில் இரசாயனப் பதார்த்தங்கள் சேர்த்து தாயார் செய்யப்பட்டு ரியுப்களில் அடைக்கப்பட்ட  நிலையில் கடைகளில் விற்பனையாகி வருகின்றது.

இவ்வாறு ரியுப்களில் அடைக்கப்பட்ட மருதாணி எந்தளவிற்கு எமக்கு நன்மை பயக்கிறது என்பது கேள்விக்குறியே. இது தொடர்பில் சற்று சிந்தித்தே பார்க்க வேண்டும்.

இவ்வாறு எமது கைகளிலும் கால்களிலும் மருதாணிக் கோலமிடுவதால் லுக்கேமியா என்ற புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வொன்றை நடத்தியதாகவும், இதன்போது ஆண்களை விட அதிகளவான பெண்கள் லுக்கேமியா புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பது தொடர்பில் தெரியவந்துள்ளது. ஏனைய நாடுகளிலுள்ள பெண்களை விட அங்குள்ள 63 சதவீதமான பெண்கள் லுக்கேமியா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணம் என்னவென்று ஆராயப்பட்டபோது அழகிற்காக கைகளிலும் கால்களிலும் வரைந்து கொள்ளும் மருதாணி காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. மருதாணியுடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட இராசாயனப் பதார்த்தங்கள் இந்த புற்றுநோய்த் தாக்கத்திற்கு காரணமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, கடைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படும் மருதாணிப் பசையை தவிர்த்து நாம் இயற்கையான முறையில் மருதாணிப் பசையை தயார் செய்யலாம்.

அந்தவகையில் மருதாணி இலையுடன் தேயிலைச் சாயம் மற்றும் தேசிப்புளி ஆகியவற்றைச் சேர்த்து தாயார் செய்தால் சிவக்கும் மருதாணி நமது கைகளில் சிவக்கும். நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கில்லை.


  Comments - 0

  • Naleem. Wednesday, 28 July 2010 03:14 AM

    உங்கள் கருத்துகள் வாரவேற்கத்தக்கன. செயற்கையை விடவும் இயற்கை எப்போதும் எமக்குப் பொருத்தமானது என்பதற்கு உங்கள் இந்த ஆய்வு ஒரு யதார்த்தமான உதாரணத்தை எடுத்துக்காட்டி பொது மக்களை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும் வகையில் அமைகிறது. உங்களின் அறிவுரைகளுக்கு மிக்க நன்றி.

    Reply : 0       0

    sheen Friday, 30 July 2010 09:22 PM

    அழகு சாதனப்பொருட்கள் முன்பு வீட்டிலேயே பெண்களால் தயாரிக்கப்பட்டது. இப்போது விளம்பரங்களை பார்த்து அதிக விலையை கூட ஒரு நாகரிகமாக கருதி பெண்கள் இவ்வாறான பொருட்களில் அதிக பணம் செலவிடுகின்றனர். அழகு எப்போதும் அபாயமானதுதான்! சிலர் முகத்துக்கு பூசிய இம்மாதிரியான பூச்சுகளினால் அழகை இழந்து முகம் யாருக்கும் காட்ட இயலாத நிலையில் உள்ளனர்.

    Reply : 0       0

    meena Thursday, 24 May 2012 02:47 PM

    உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக அமைகிறன்றது நன்றி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X