2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வீட்டிலிருந்தே பாதங்களின் அழகை பேணலாம் ...

Kogilavani   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அழகாகத் திகழ வேண்டுமென எண்ணுபவர்களே எம்மில் அதிகம். அதில் பலர் தமது முகம் மற்றும் உடலின் ஏனைய பகுதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமது பாதங்களுக்கு கொடுப்பதில்லை. பாதங்கள் பலராலும் அவதானிக்கப்படும் ஒரு அங்கமாக உள்ளன என்பதை பலர் உணரத் தவறி விடுகின்றனர்.

சிலரது பாதங்களைப் பார்த்தால் வெயிலில் செருப்புக்கள் அணிந்தமைக்கான தடங்கள்,  புண்கள் வந்து கருப்பாகி போன தழும்புகள், கால் ஆணி போன்றவை இருந்து கால்களின் அழகையே நாசப்படுத்திக்கொண்டு இருக்கும்.

வீதிச்சேறு, தூசுக்கள் போன்றவை பாதங்களில் படிந்து சேற்றுப்புண், புண்கள், கல் தழும்புகள், காயங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி பாதங்களின் அழகையே கெடுத்துவிடும். வெயிலினால் ஏற்படும் கறுமையும் பாதங்களின் அழகுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சிலர் தங்களது பாதங்களை முறையாக பேணிப் பாதுகாத்துக்கொள்வதற்கு நேரம் போதாமலிருப்பதாக கூறுவார்கள்.

வேறு சிலர் கால்களின் அழகை பாதுகாப்பதற்கு அழகு சிகிச்சை நிலையங்களை தேடிச் சென்று பெருந்தொகை பணத்தை செலவழித்து வருவார்கள்.

ஆனால், வீட்டிலிருந்தவாறே பாதங்களின் அழகை மெருகூட்டிக்கொள்ளலாம்.

கால்களில் ஆணி வளர்ந்திருக்கின்றது என்று கூறிக்கொண்டு இருப்பவர்கள் அதை இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை வெட்டிவிடலாம். வெட்டியப்பின்பு கால்களை ஊண்றி நடக்காமல் மென்மையாக நடந்துப்பழக வேண்டும்.

மேலும் கால்களை அழகாக்கிக்கொண்டு மிருதுவான பாதங்களை பெற்றுக்கொள்ளவதற்கு பல வழிமுறைகள் உள்ளன:

முதலில் சவர்க்கார கரைசல்கொண்ட ஒரு வாளி சூடான நீர்,  நகப்பூச்சிக்களை நீக்கும் திரவம்,  கொஞ்சம் பஞ்சு,  உப்பு, வாசணையூட்டப்பட்ட  எண்ணெய்,  நெய்ல் கிளிப்பர்,  நெய்ல் பைல்,  நகங்களில் உள்ள சதை நீக்கி (cuticle sticks)> பாதங்களின் அழுக்குகளை நீக்குவதற்கான foot file or pumice stone, கால்  பாதங்களுக்கு பூசும் கிறீம் மற்றும் பல வர்ணங்களில் உள்ள நகப்பூச்சிக்கள் போன்றவற்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
 
எடுத்துவைத்துள்ள சுடுநீரில் எண்ணெய் அல்லது உப்பு என்பவற்றை நன்கு கலந்து விடவும். பின்பு கால் நகங்களில் உள்ள பழமையான நகப்பூச்சிகளை அகற்றிவிட்டு பாதங்களை மிருதுவான சுடுநீரில் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். 10 நிமிடங்களின் பின்பு பாதங்களை கொதிநீரில் இருந்து எடுத்து தூய்மையான துவாயால் நீரற்றுப்போக துடைத்து எடுக்கவும்.

அதிகமாக வளர்ந்திருக்கும் நகங்கள் பார்ப்பதற்கு மகிழ்வை தரமாட்டா. அதனால் நக வெட்டியால் அதனை ஓரளவு வெட்டிவிடுங்கள். எந்த வடிவில் நகங்களை வளர்க்கவேண்டும் என்று தீர்மானித்து அதன்படி பூட் பைல் மூலம் நகங்களை வடிவமைத்துக்கொள்ளுங்கள். நகங்களுக்கு மேல் அதிகமாக வளர்ந்துள்ள  மேல் தோல் சதை பகுதியை cuticle sticks இனால் அகற்றியெடுங்கள்.

தோலின் இறந்த செல்களை நீக்குவது முக்கியமானது. அதனால்  ஒயில் அல்லது மொய்ஸ்சர் அடிப்படையிலான பூட் ஸ்கரப்பை (foot scrub)  பாதத்திற்கு தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பின்பு பாதங்களை pumice கற்களால் தேய்த்து எடுங்கள்.

மீண்டும் உங்களது பாதங்களை  சுடுநீரில் அமிழ்த்தி ஸ்ரப்பை அகற்றுங்கள். பின்பு லோஷன்களை பாதங்களுக்கு தேய்த்தெடுங்கள்.

கால்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் அழகு சிகிச்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாவிட்டால் மேற்படி முறை மூலம் பாதங்களை பராமரித்துக் கொள்ளலாம். நேரம் இல்லை என்று கூறிக்கொள்பவர்கள், மாதத்தில் அரை மணித்தியாலத்தையாவது இதற்காக ஒதுக்குவது நல்லது.
 


You May Also Like

  Comments - 0

  • dhar Friday, 03 December 2010 08:43 PM

    நல்லது இது செய்தி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X