Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதல் மனிதர்களை வலிமைப்படுத்தும் என்பார்கள். மனிதர்களில் காதல் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்களின் ஆய்வு முடிவுகளும் மேற்படி கருத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
தமது வாழ்க்கைத் துணை மீதான காதல் மூலம் தம்பதிகள் தம்மை எவ்வாறு சக்திமிக்கவர்களாக மாற்றிக்கொள்ளலாம் என்பதற்கான 5 வழிகள் இவை. நீங்களும் முயன்று பாருங்களேன்.
1) உங்களைப் போன்ற ஒரு வாழ்க்கைத் துணையை தெரிவு செய்தல்
ஒருவரின் வாழ்க்கையின் வெற்றியானது அவருக்கு அமையும் வாழ்க்கை துணையின் கைகளிலே அமைந்துள்ளது. உங்களுக்கு அமையும் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கே உண்டு. அத்தேர்வில் உங்களது பிரகாசமான எதிர்காலமும் அமைந்துள்ளது.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் துணை எப்போதும் உங்களது தகுதியை ஒத்தவராக இருப்பது நல்லது. ஆனால் ஒருவரின் வாழ்க்கைத் துணை அவரின் தகுதியைவிட சற்று குறைந்தவராக இருந்தாலும் அத்துணைவர் துணைவி தமது தகுதிக்கு ஏற்றால் போல் முன்னேறச் செய்யலாம்.
1956 -1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறைந்தபட்சம் 7 வருடகாலம் தம்பதிகளாக இருந்த 169 ஜோடிகளிடம் இது தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டபோது மிகவும் வலுவான நெருக்கத்தை – உறவைக் கொண்டுள்ள தம்பதிகளில் இருவரும் ஒரே மாதிரியான புத்திக்கூர்மையானவர்களாக, நெகிழ்வுத்தன்மையுடையவர்களாக, சமூக பொறுப்புனர்வுடையவர்களாக, கல்வியறிவு உடையவர்களாக இருந்துள்ளமை தெரியவந்தது.
14 வருடகாலம் ஒன்றாக வாழ்ந்தவர்களை ஆய்வுக்குட்படுத்தியபோது குறைந்த மட்டத்திலிருந்தவர்களும் பின்னர் ஏறத்தாழ தமது வாழ்க்கைத் துணையின் அறிவு மட்டத்திற்கு உயர்ந்திருந்தமை தெரியவந்தது.
2) கைகளை பற்றிக்கொள்ளல்
வீதிகளில் காதலர்கள் கைகோர்த்தவாறு செல்வது காதலர்களின் வழக்கமாக இருக்கிறது. ஆனால் திருமணத்தின் பின்னரும் இதைத் தொடர்வது நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வாழ்க்கைத் துணையுடன் கைகோர்த்து கொள்வதன் மூலம் மன அழுத்தங்கள் குறைகின்றன எனக் கூறப்படுகிறது.
மூளையை ஸ்கேன் செய்து பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்போது அவர்கள் மின்சார அதிர்ச்சியை எதிர்கொள்ளப்போவதாக கூறப்பட்டது. இந்த ஆய்வின்போது தமது வாழ்க்கைத் துணையின் கரம் பற்றியிருந்த பெண்களின் மூளையில் அச்சத்திற்கான பிரதிபலிப்பு குறைவாகவே இருந்ததாம். அதாவது தமது கணவருடன் கைகோர்த்திருந்த பெண்கள் மின்சார அதிர்ச்சி குறித்து அவர்கள் குறைவாகவே அச்சமடைந்தனர்.
3) தினமும் ஒரு தடவையாவது முத்தமிடுதல்
தம்பதிகள் ஒரு நாளுக்கு ஒரு தடவையாவது முத்தமிட்டுக்கொள்வது நல்லது. இந்த நெருக்கமான தொடுகையானது மனிதர்களிடையே நெருக்கவுணர்வை அதிகரிக்கும் ஒக்ஸிடோஸின் எனும் ஹோர்மோன் அதிகமாக சுரப்பதாகவும் மன அழுத்தத்துடன் தொடர்புடைய கோர்டிசோல் ஹோர்மன் குறைவாக சுரப்பதும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
முத்தமிடும்போது மூளையின் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தும் நரம்புகளில் 50 சதவீதமானவை தூண்டப்படுகின்றன. முத்தத்தின் போது, உங்கள் துணையின் தோலின் கதகதப்பு வாசணை, மென்மையான உதடுகளின் சுவை, உணர்வு என்பன மூளைக்குள் சென்று நரம்புகளைத் தூண்டி புதிய பிணைப்பை ஏற்படுத்துகிறது.
4) வாழ்க்கைத் துணையின் படத்தை மேசைமீது வைத்திருத்தல்
அன்புக்குரியவர்களின் புகைப்படங்களைப் பார்க்கும்போது, மூளையில் மகிழ்ச்சிக்குரிய பாகம் தூண்டப்படுவதாக மூளை ஸ்கேன் செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உறவு நிலையின் ஆரம்ப கட்டத்தில் இது அதிகமாகவுள்ளது.
மூளையின் இதே பாகம்தான் போதைப்பொருட்களை பயன்படுத்தும்போதும் தூண்டப்படுகின்றது. எனவே உங்கள் அன்புக்குரியவரின் புகைப்படத்தைப் பார்க்கும்போது 'போதையேறுகிறது' என்று சொல்லிக்கொள்ளலாம்.
5) இணைந்திருத்தல்
மனிதர்கள் தனிமையாக அல்லது ஏனையோருடன் இருப்பதைவிட தமது வாழ்க்கைத் துணையுடன் இருக்கம்போது இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே தம்பதிகள் இருவரும் பேசாவிட்டால்கூட தொலைக்காட்சி பார்த்தல், வாசித்தல், இணையத்தளங்களை பார்வையிடுதல் அல்லது வேறு பணிகளில் ஈடுபடுவதை ஒரே அறையில் இருந்து செய்வது நன்மையளிக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago