Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 14 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்லா காதலர்களும் காதலர் தினத்தை தனது காதல் துணையுடன் செலவழிக்கவே விரும்புவார்கள். காதலர் தினத்தின் வருகைக்காக காத்திருப்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். காதலர் தினத்தை தமது கணவன், மனைவியுடன் செலவிடுவதற்கு என்ன செய்யலாம்? இதோ சில வழிகள்....
நடைதூர சுற்றுலாவை ஒழுங்கு செய்யுங்கள்
நீங்கள் பயணம் செய்வதை விரும்புபவர்களாக இருந்தால் உங்கள் காதல் துணையுடன் குறுகிய கால சுற்றுலாவை மேற்கொள்ளலாம். ஒருநாள் தங்குவதற்காக ஹோட்டலொன்றை தேர்வு செய்யுங்கள்.
குறித்த இடத்தை அடைந்தபின் உங்களால் உங்களுக்கு மிகவும் பிடித்த விடுதியில் இரவு உணவை சேர்ந்து உண்ணலாம். மற்றும் ஹோட்டலுக்கு திரும்புவதற்கு முன்பாக நீங்கள் நல்ல திரைப்படமொன்றை பார்த்து விட்டு செல்லலாம்.
நீர்தடாகம் உள்ளே அமைந்த ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள்.
நீங்களும் உங்கள் உயிர் துணையும் சிறுவர்களைபோல நீர் தடாகத்தில் குதூகலித்து மகிழலாம். நீங்கள் இரவை கழிக்கும் ஹோட்டலில் நீர்த் தடாகம் இருந்தால் அதில் நீங்கள் உங்கள் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடலாம். கோடை காலத்தில் நீங்கள் இத்தகைய நீர்தடாகத்தில் பயன்படுத்துவீர்களானால் அது ஒரு சொர்க்கத்தை போன்று அமையும்.
இரவு உணவை முடித்த பின்பு ஜோடி நடனமாடலாம்
உங்களுக்கு நடனமாடுவது விருப்பமா? அப்படியானால் உங்கள் துணையுடன் நீங்கள் சிறப்பாக இரவு உணவு உட்கொண்டபின் நடனமாடுவதன் மூலம் அந்த உணவை இலகுவாக சமிக்கச் செய்யலாம்.
அது அற்புதமான அனுபவமாக அமையும். அது ஒரு வகையில் உடற்பயிற்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு அனுபவிக்கதக்க இரவாக அது மாறிப்போகும்.
நல்ல விளையாட்டு அல்லது நல்ல பாடல் அரங்கை பாருங்கள்.
நல்ல திரைப்படம், இசை நிகழ்ச்சிகளை பார்க்கவிரும்பினால் முதலில் எந்த திரைப்படத்திற்கு எந்த நிகழ்ச்சிக்கு செல்ல விரும்புகின்றீர்கள் என்று இருவரும் சேர்ந்து தீர்மானியுங்கள். வீட்டிலேயே திரைப்படத்தை பார்க்க அல்லது பாடல்களை கேட்க விரும்பினால் கடைகளுக்கு சென்று இருவருக்கும் விருப்பமான இறுவெட்டை வாங்கி வந்து உங்கள் துணையுடன் அமர்ந்து பாருங்கள்.
வீட்டிலிருந்தும் கொண்டாடலாம்
உங்கள் கைகளில் பணம் குறைவாக இருந்தால் உங்களால் வீட்டிலிருந்தே காதலர் தினத்தை சிறப்பாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் கொண்டாட முடியும். வீட்டையும் மகிழ்ச்சி மிக்கதாக மாற்றியமைக்க முடியும்.
உங்கள் கைகளில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப அலங்கார பொருட்களை வாங்கி அதனை கொண்டு வீட்டை அலங்கரியுங்கள். மற்றும் உங்கள் வீட்டு இரவு நேர உணவு மேசையை அலங்கரித்துக்கொள்ளுங்கள். சற்று வித்தியாசமாக இருவரும் இணைந்து உங்கள் இருவருக்குமான இரவு உணவை தயார் செய்யுங்கள்.
உங்களால் ஒரு ஓய்வான மாலைநேரத்தை உங்களுக்கு விருப்பமான திரைப்படத்தை பார்ப்பதனூடாக மகிழ்ச்சியாக நிறைவு செய்ய முடியும்.
கடந்த காலத்தை மீட்டுப் பார்க்கலாம்
ஒவ்வொரு காதலர்களும் தங்களது துணை கொடுத்த நினைவுச் சின்னத்தை நிச்சயமாக பெட்டியில் போட்டு பத்திரமாக வைத்திருப்பார்கள். இந்த புனிதமான நாளில் இருவரும் இணைந்து வீட்டில் இருந்த வண்ணம் ஒருவருக்கொருவர் பகிர்ந்தளித்துக்கொண்ட பொருட்களை வெளியில் எடுத்து கடந்த காலத்தை மீட்டுப் பார்க்கலாம்.
சிலவேளைகளில் அந்தப் பொருட்களே உங்களை மீண்டும் புதிய காதலர்களாக உருவாக்கவும் கூடும். இதனைவிட ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்துக்கொள்வதற்காக பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்கள், காதல் கவிதைகள், ஒருவருக்கொருவர் ஏவிக்கொண்ட அம்புக் குறிகள் என்பவற்றை வெளியில் எடுத்து வந்து மீண்டும் வாசித்துப் பார்க்கலாம்.
பெற்றோருக்கு தெரியாமல் திருட்டுத் தனமாக இருவரும் அடிக்கடி சந்தித்த இடங்கள், கோபித்துக் கொண்ட சந்தர்ப்பங்களை ஒரு கணம் நினைவுறுத்தி பார்க்கலாம்.
ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்ளல்
யாருக்கு என்ன அதிகமாகப் பிடிக்கும் என்பது இருவருமே நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள். உதாரணத்திற்கு ஆடை, கைக்கடிகாரம், விளையாட்டு பொம்மை, சிலைகள், ரோஜா மலர். இதில் எதையாவது ஒன்றை அதிர்ச்சியூட்டும் வகையில் அன்றைய தினம் உங்கள் துணைக்கு பரிசளிக்கலாம்.
இது திருமணமாகிய காதலர்கள் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்வதற்குரிய ஒரு சில ஆலோசனைகள். கைகளில் பணம் அதிகமாக இருந்தாலும் சரி பண புழக்கம் குறைவாக இருந்தாலும் சரி, காதலர் தினத்தில் உங்கள் துணையுடன் நீங்கள் சேர்த்திருக்கும் வரை அது மிக மகிழ்ச்சியான நாள் என்பதை மனதில் வைத்துககொள்ளுங்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago