2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிளாஸ்திக்கிலுள்ள இரசாயனங்களால் குழந்தைகளுக்கு ஆபத்து

Kogilavani   / 2011 மே 04 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உணவு பொதியிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்திக் பொருட்களிலுள்ள இரசாயன பதார்த்தமொன்றுக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாசக் கோளாறுகளுக்கும் இடையில் தொடர்புள்ளதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகளவில் 'பிஸ்பெனல் - ஏ' வை (bisphenol  A)  கொண்டுள்ள கர்ப்பமுற்றிருக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதத்தில் சுவாசக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு இரு மடங்கு உள்ளதென மேற்படி ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு வீஸிங் எனும் இந்த சுவாசக் கோளாறு காணப்படுவதானது நுரையீரல் சேதம், ஆஸ்துமா, பீனிசம், ஒவ்வாமை அல்லது தொற்றுநோய்கள் போன்றவற்றை ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

பிஸ்பெனல் ஏ அல்லது பீ.பி.ஏ எனும் இரசாயனம் பிளாஸ்திக்கை இறுக்கமாக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றது. உலகில் அதிகமாக தயாரிக்கப்படும் இரசாயனப் பொருட்களில் இதுவும் ஒன்றாகும். தினமும் பயன்படுத்தப்படும் டஸன் கணக்கிலான பொருட்களில் இந்த இராசாயன பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான போத்தல்கள், இறுவட்டு கொள்கலன்கள், உணவு, மற்றும் குடிபானம் பொதியிடப்பட்ட பொருட்கள் முதலானவற்றிலும் இந்த இராசாயன பாதார்த்தம் கலக்கப்பட்டுள்ளது.

இந்த இரசாயன பதார்த்தம் உடலில் கலந்தால் ஹோமோன்களைப் போன்று செயற்படுவதாக விஞ்ஞானிகள் பலர் நம்புகின்றனர்.

இந்த பரிசோதனை பல விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்டபோது பாதுகாப்பானது எனக் காட்டியப் போதிலும் வேறு பல பரிசோதனைகள் இந்த பிஸ்பெனல் ஏ யினால் மார்பக புற்றுநோய் மற்றும் ஈரல் பாதிப்பு, பருமானான சரீரம், சர்க்கரை நோய், குழந்தைப்பேறு பிரச்சினைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கர்ப்பமுற்ற 367  பெண்களிடம் பீ.பீ.ஏ. மட்டம் சோதிக்கப்பட்டது. அவர்களிடம் 16 மற்றும் 26 ஆவது கர்ப்ப வாரங்களில் இந்த இரசாயன மட்டம், ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 16 ஆவது வாரத்தில் அதிக பீ.பி.ஏ. மட்டத்தை கொண்டிருந்த கர்ப்பினிகளில் 99 சதவீதமானோர் சுவாசக் கோலாறு கொண்ட குழந்தைகளை பிரசவிப்பதற்கான வாய்ப்பு இரு மடங்காக இருப்பது கண்டறியப்பட்டது.  அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 6 மாத வயதில் சுவாசக்கோளாறை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் கர்ப்பத்தின் 26 ஆவது வாரத்தில் அதிக  பீ.பி.ஏ அளவை கொண்டிருந்த பெண்கள் இந்த நிலையுடன் தொடர்புப்படவில்லை.

இது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், ஹோர்மோன்களை குழப்பதற்திற்குள்ளாக்கும் இரசாயனங்கள் இப்பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கர்ப்பினிப் பெண்கள் கர்ப்ப காலத்தின் முக்கிய பகுதிகளில் பீ.பி.ஏ. கொண்ட பொருட்களை தவிர்க்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

'இந்த இரசாயனத்துடன் தொடர்புபடுவதை நாம் குறைத்துக்கொள்ள வேண்டியதை இந்த ஆய்வு மேலும் வலியுறுத்துகிறது. முக்கியமாக கர்ப்பமுற்ற பெண்கள் இதை மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டும்'  என அமெரிக்காவின் இரசாயன, சுகாதார மற்றும் சூழல் மேற்பார்வை அமைப்பின் இயக்குநர் எலிஸபெத் செல்டர் கிறீன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அடம். ஜே.ஸ்பெனியர் என்பவர் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்தில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பொருட்களில் பீ.பி.ஏ கலக்கப்படுவதை தடைசெய்த முதல் நாடாக டென்மார்க் விளங்கயது. ஐரோப்பிய ஒன்றியம் குழந்தைகளுக்கான போத்தல்களில் இந்த இரசாயனத்தை கலப்பதற்கு கடந்த வருடம் தடை விதித்தது. கனடா மற்றும் அமெரிக்கா ஆகியனவும் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X