Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மே 17 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களின் அழகை தீர்மானிப்பதில் அவர்களின் மார்பகங்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. அந்த மார்பகங்களின் அழகு அவர்கள் அணியும் மார்புக் கச்சைகளில் (பிரா) தங்கியுள்ளது. ஆனால், பொருத்தமற்ற மார்புக் கச்சைகள் பெண்களின் அழகை மாத்திரமல்லாமல், அவர்களின் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கின்றன.
போலந்து நாட்டின் போலந்திலுள்ள 'ஆரோக்கிய தாய்மார்களுக்கான நிறுவகத்தை' சேர்ந்த விஞ்ஞானிகள் பெண்களின் மார்பகங்களை இயற்கையாக அசையவிடும் அதேவேளை மார்பகங்களை அழகாக வைத்துக்கொள்ளக் கூடியதாகவும் உள்ள பிராவை புதிததாக வடிவமைத்துள்ளனர்.
மார்பகங்களை அழுத்தாத அதேவேளை, அவற்றின் வடிவத்தை பேணக்கூடிய பிராக்களை வடிவமைப்பதற்கு விஞ்ஞானிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஏனைய நவீன பிராக்களினால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்ப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
தற்போது மேற்படி குழுவானது கணினி உதவியுடன் பிராக்களின் அழுத்தப் புள்ளிகளை நீக்கி, மிகச் சரியான 'ஆரோக்கிய பிராவை' வடிவமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேற்படி விஞ்ஞானிகள் இரண்டு வருடங்களை செலவிட்டு, மார்பகங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகாமல் இயற்கையாக அசைய இடமளிப்பதன் மூலம் அதிகபட்ச சௌகரியத்தை வழங்குவதுடன் புற்றுநோயிலிருந்தும் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் இந்த மார்பக கச்சையை உருவாக்கியுள்ளனர்.
'பெண்கள் அடிக்கடி மிகச் சிறிய அளவுடைய மார்பக கச்சைகளை வாங்குகின்றனர். ஆனால், அவை உண்மையில் அசௌகரியமாக இருப்பதுடன் பார்வைக்கும் அழகாக இருக்காது. அத்துடன் பல நோய்கள் ஏற்படுவதற்கும் ஏதுவாய் அமைந்து விடுகின்றன' என மேற்படி விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் மாரெக் ஸாட்ரோஸ்னி தெரிவித்துள்ளார்.
'மார்புக் கச்சைகளின் கொளுக்கிகள் மிக இறுக்கமாக அல்லது மிகவும் தளர்வாக இருப்பதால் மார்பகத்தின் திசுக்கள் அசாதாரணமாக அசைகின்றன. இந்நிலை மார்பகப் புற்றுநோய்க்கு வழியமைக்கின்றது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
'கொரின்' எனும் நிறுவனம் இந்த பிராவை தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மொரியஸ் ஹன்க்ஸ்கா இது தொடர்பாக கூறுகையில், ''இந்த பிரா தயாரிக்கப்பட்ட முறையை விளக்குவது கடினமானது. மார்பகங்களை பிராக்கள் அழுத்தும் புள்ளிகளை கணினியில் முப்பரிமாண முறையில் கண்டறிந்து துல்லியமான மாதிரி கிடைக்கும்வரை படிப்படியாக அந்த அழுத்தப்புள்ளிகளை நீக்கினோம். இதை தயாரித்த பின்னர் பெண்களுக்கு அணிவித்து சோதனை நடத்தினோம்'' என்றார்.
ஐரோப்பாவில் விற்பனையாகும் இந்த மார்புக் கச்சையின் விலை 50 யூரோக்களாகும்.
8 minute ago
30 minute ago
37 minute ago
ameer Tuesday, 07 June 2011 07:12 PM
ஆண்களுக்கும் இதை போல் ஏதாவது செய்யலாமா?
Reply : 0 0
Vathsalan Friday, 15 July 2011 03:37 AM
இரண்டாவது படத்தில் உள்ள மாதிரி மடிப்பு இருந்தால் பெண்களுக்கு வலி இருக்காதா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
30 minute ago
37 minute ago