Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மே 23 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு வீட்டின் அழகையும் சுத்தத்தையும் தீர்மானிப்பதில் சமயலறை பிரதான பங்கு வகிக்கின்றது. ஆனால், பரபரப்பான உலகில் சமயலறைச் சுத்தம் என்பது இன்று பலருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அவசர உலகில் அவசர அவசரமாக சமைத்து எடுத்துக்கொண்டு செல்வோரையே இப்போது அதிகம் காணமுடியும். விடுமுறை நாட்களில் மட்டுமே வீட்டை துப்புரவு செய்வதை வழக்கமாகக் கொண்ட 'நவநாகரீக' காலத்திலேயே நாம் வாழ்கிறோம்.
ஒரு வீட்டின் சமயலறை என்பது சுத்தமாக இருப்பது மிக அவசியமானது. ஏனெனில் நமது நீண்ட ஆயுளை தீர்மானிப்பதில் நாம் உண்ணும் உணவுகளும் பிரதான பங்கு வகிக்கின்றன. அந்த உணவுகளை தயார்படுத்தும் சூழல் சுத்தமாக இருந்தால் மட்டுமே அங்கு சமைக்கப்படும் உணவுகளும் சுத்தமாக இருக்கும்.
சமயலறயை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவர்களுக்கு கீழ்வரும் படிமுறைகள் ஓரளவில் உதவக்கூடும்.
முதலில் சமையலறையில் முடுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும். அவசர பாவனைக்குத் தேவையற்றது என நீங்கள் கருதும் பொருட்களை முகப்பில் வைக்ககூடாது. பாத்திரங்களை அதிகமாக குவித்து வைக்கும்போது அவை சில நேரங்களில் அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். அதைவிட சமயலறையின் சுத்தத்திற்கும் அது தடையாக அமைந்துவிடும்.
அதன்பின் சுத்தம் செய்வதற்கான திரவங்களைப் பயன்படுத்தி சமயலறையில் முகப்பு, முடுக்குகளில் படிந்திரும் தூசுகளையும், கறைகளையும் அகற்றவேண்டும்.
கேஸ் அடுப்பை, இரவில் சமையல் வேலைகள் முடிந்தபின் சுத்தம் செய்யவேண்டும். அடுப்பின் சுத்தத்தை பார்த்து எம்மைப் பற்றி மதிப்பிடுபவர்கள் அதிகம். சமைக்கும் போது சாதத்தின் கஞ்சி, கறிகள், கரி போன்றவை வாயு அடுப்பில் படிந்து பார்ப்பதற்கு அலங்கோலமாக இருக்கும். எனவே சமைத்து முடிந்தபின் முதலில் வாயு அடுப்பை பளபளக்கும் வகையில் சுத்தம் செய்துவிடுவது நல்லது. எவ்வளவுதான் சமயலறையை சுத்தம் செய்தாலும் அடுப்பினை சுத்தம் செய்யாமல் இருந்தால் அது சமயலைறையின் அழகையே கெடுத்துவிடும்.
குளிர்சாதனப்பெட்டியையும் நன்கு சுத்தம் செய்தல் மிக முக்கியமானது. குளிர்சாதனப்பெட்டியின் வெளித்தோற்றத்தில் படிந்துகிடக்கும் தூசுகாளனது குளிர்சாதனப்பெட்டியின் உண்மை நிறத்தையே மாற்றிவிடுகின்றது. எனவே அவற்றை நீக்கி குளிர்சாதனப் பெட்டியை புதுப்பொலிவுடன் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.
ஆனால், அதைவிட முக்கியமானது குளிர்சாதனப் பெட்டியின் உட்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது. குளிர்சாதனப் பெட்டியை திறந்தவுடனே எழும் துர்நாற்றத்தை முற்றிலும் தவிர்த்துக்கொள்வது சிறந்தது. குளிர்சாதனப்பெட்டியில் தேவைக்கு உதவாத வகையில் அடுக்கிவைத்திருக்கும் வெற்றுப்போத்தல்கள் பழைய பொருட்கள் என்பவற்றை அகற்றிவிட வேண்டும்.
உணவுத் தட்டுக்கள், பானங்கள் அருந்தப் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை அப்படியே குவித்து வைக்காமல் அந்தந்த வேளைகளிலேயே கழுவி அடுக்கி விடுவது நல்லது.
சமயலைறையில் காணப்படும் 'ஸிங்க்' இல் உணவுத் துகள்கள், எண்ணை மற்றும் கழிவுபொருட்கள் என்பன தேங்கிக் கிடக்கும். இவற்றை சுத்தம் செய்யாமல் விடுவதால் அதனூடாக கிருமிகள் தொற்றுகின்றன. சில நேரங்களில் இவை துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே ஸிங்கை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஸிங்கில் பாத்திரங்களை கழுவி முடித்தபின்பு ஸிங்கில் படிந்துள்ள எண்ணையை சவர்க்கார கரைசல், ஸ்பொஞ்ச் ஆகியவற்றைக் கொண்டும் சுத்தம் செய்துவிடவேண்டும்.
சமையலைறயிலுள்ள போத்தல்கள் மற்றும் பலசரக்கு பொருட்களை அடுக்கி வைத்திருக்கும் இராக்கைகள், அலுமாரிகளையும் சுத்தம் செய்யவேண்டும். இவற்றின் வெளித்தோற்றத்தில் படிந்துகிடக்கும் தூசுகள் ஒட்டடைகளை அகற்றிவிட்டு அவற்றையும் பளிச்சிடும் வகையில் வைத்திருந்தால் சமையலறை அழகாக காட்சியளிக்கும்.
சமயலைறையின் தரையில் அழுக்குகள் தேங்கியிருந்தால் துர்நாற்றம் ஏற்படுவது இயல்பு. எனவே அழுக்கு நீக்கி கரைசல்களை பயன்படுத்தி பளபளக்கும் வகையிலும் தரையில் நீர் இல்லாத வகையிலும் சுத்தம் செய்துவிடவேண்டும்.
அதேவேளை தரையில் நீர் முதலான திரவங்கள் சிந்தப்பட்டிருந்தால் அதை உடனே துடைத்துவிட வேண்டும். அது சுத்தத்திற்கு மட்டுமல்ல, வழுக்கி விழுதல் போன்ற ஆபத்துகளையும் தவிர்க்க உதவும்.
இவையனைத்தையும் செய்து முடித்தபின்பு குப்பைக் கூடை, தும்புத்தடி, சவல், பாத்திரங்களை பிடிப்பதற்கு பயன்படுத்திய துணிகள் என்பவற்றையும் கழுவி உலர விடுவது சிறந்தது.
jaliyuath Wednesday, 01 June 2011 07:01 PM
நல்ல யோசனை. ஆனால் நமது பெண்கள் இதற்கு ஒத்து வருவார்களா என்பது தான் சந்தேகம் , அவர்களுக்கு தராம பார்க்கவே நேரம் இல்லை
Reply : 0 0
risimb Sunday, 17 July 2011 08:51 AM
கவலைப்பட வேண்டாம் 'ஒளிமயமான எதிர்காலம்'....... அமைய வாழ்த்துக்கள் நண்பரே.
Reply : 0 0
kavosalaya.A Friday, 26 August 2011 08:24 PM
சூப்பர் கிட்செர்ன் ஸ்பெஷல் ரொம்ப பிரயோசனமாக இருந்தது. எது அனைவருக்கும் மிகுந்த உள்ளது. நீங்கள் கொடுத்த டிப்ஸை நாங்களும் கடை பிடிப்போம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago