2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மனைவியின் கர்ப்பத்தின்போது பிரசவ வேதனைகளை அனுபவிக்கும் ஆண்கள்: ஆய்வில் தகவல்

Kogilavani   / 2011 மே 25 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆண்களில் நான்கில் ஒரு பங்கினர் தமது மனைவி கர்ப்பமுற்றிருக்கும்போது தாமும் கர்ப்பகால 'வேதனைகளை' அனுபவிப்பதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வொன்றில் மூலம் அறியப்பட்டுள்ளது.

தந்தையாகப் போகும் ஆண்கள் தங்களது துணைவியின் கர்ப்பத்துடன் மிக நெருக்கமாகிவிடுவதுடன் ஆண்களில் பலர் கர்ப்பிணிகளைப் போன்று உணவு ஒவ்வாமை மற்றும் சுகவீனம் போன்ற கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உபாதைகளின் அறிகுறிகளையும் வெளிப்படுத்துகின்றனராம்.

தந்தையாகப் போகும்  23 வீத ஆண்கள் உணர்ச்சிவசப்படக்  கூடியவர்களாகவும், உடல் உடலியல் மாற்றங்களை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றார்கள் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்தில் சில கணவர்கள் அழுதல், மனநிலை மாற்றத்திற்குள்ளாதல், வாந்தியெடுத்தல் ஆகியவற்றுடன் கர்ப்ப வலிகளையும் அனுபவிக்கின்றனராம்.

இந்த ஆய்வுகுட்படுத்தப்பட்ட தந்தையாகப் போகும் ஆண்கள், ஊறுகாய், தக்காளி, தோடம்பழம் போன்ற விநோத உணவுகளில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 26 சதவீதமானோர் மனநிலை மாற்றங்களுக்குள்ளாகினர். 10 சதவீதமானோர் உணவு  ஒவ்வாமைக்கு ஆளானார்கள். 6 சதவீதமானோர் வாந்தியெடுத்தார்கள். 3 சதவீதமானோர் கற்பனையான பிரசவ வலியை அனுபவித்தனர்.

தங்களது துணைவி கர்ப்பிணியாக இருக்கும்போது அதிக உணர்வுபூர்வமானவர்களாக விளங்குவதே இந்த ஆச்சரியமான நிலைக்கு காரணம் எனவும் அவர்கள் கூடுதலாக கர்ப்பிணிகளுக்கான வகுப்புகள் மற்றும் ஸ்கேன் சோதனைகளுக்கு செல்வதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நாப்பி தயாரிப்பு நிறுவனமொன்றினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 16 - 55 வயதுக்கிடையிலான 2000 இற்கும் அதிகமான ஆண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

தனது மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது அப்பிள் மார்மைட் போன்ற உணவுகள் மீது விருப்பம் கொண்டதாக   32 வயதான மத்தியூ டோவ்;னிங் என்பவர் கூறியுள்ளார். இவரின் மனைவி கடந்த டிசெம்பர் மாதம் முதலாவது குழந்தையை பெற்றார்.

'இந்த கர்ப்பத்திலும் பிரசவத்திலும் என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். அது எம் இருவரையும் மேலும் நெருக்கமாக்கியது. எனது உணர்வுகள் அவளின் உணர்வுகளுடன் மிக ஒத்திருப்பதை உணர்ந்தேன' என்கிறார் மத்தியூ.

மருத்துவத் தாதியான மேரி ஸ்டீன் என்பவர் கூறுகையில், கர்ப்பத்தின் 12-14 ஆவது வாரங்களில் ஸ்கேன் சோதனைகளின்போது கணவர்களும் வருவதாகவும் அவர்கள் கர்ப்பிணிகளுக்கான வகுப்புகளிலும் கலந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

'இவ்விடயத்தில் ஆண்கள் இவ்வாறு ஈடுபடுவது குழந்தையுடனான அவர்களின் பிணைப்பை  அதிகரிக்கிறது. அத்துடன் தமது துணைவியின் அனுபவங்கள் பற்றியும் அதிகம் அறிந்துகொள்கின்றனர்' என அவர் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 26 May 2011 09:17 PM

    சிலர் நினைத்துக்கொண்டு fantasy சுகம் அனுபவிப்பது போல் இவர்கள் துன்பத்தை நினைத்து நினைத்து வருந்துகின்றரோ?

    Reply : 0       0

    Thilak Friday, 27 May 2011 12:21 AM

    மனைவி மீதான அன்புதான் இதற்கு காரணமாக இருக்கும்.

    Reply : 0       0

    Lasitha Saturday, 18 June 2011 07:01 PM

    ella angalum ippadi irundal ellarudaya lifum alaga irukkum.

    Reply : 0       0

    IFHAM Saturday, 17 September 2011 01:18 AM

    ஏன்பா இவ்வளவு பயந்து நடக்கிறே?

    Reply : 0       0

    mishal Thursday, 13 October 2011 02:15 AM

    சந்தோமான wishiyam thaan. aanal ella aangalum appadi alla.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X