Kogilavani / 2011 ஓகஸ்ட் 08 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடற்பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றும் பெண்கள் கட்டாயமாக ஸ்போர்ட்ஸ் பிரா அணிய வேண்டுமென பிரித்தானிய விஞ்ஞானியொருவர் தெரிவித்துள்ளார்.
போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி விஞ்ஞானத்துறையைச் சேர்ந்த மார்பக இயக்க நிபுணரான டாக்டர் ஜோனா ஸ்கார் என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'பெண்கள் நாளாந்தம் பயன்படுத்தும் சராசரி மார்புக் கச்சைகள் உடற்பயிற்சிகளின் போதும் அணிவது உடற்பயிற்சிகளில் சிறப்பான முறையில் ஈடுபவதற்கு ஏதுவனதாய் அமைய மாட்டா. இத்தகைய மார்புக்கச்சைகளினால் வலி மற்றும் தொய்வே ஏற்படும்' என டாக்டர் ஜோனா தெரிவித்துள்ளார்.
'விளையாட்டுக்கான மார்பகக் கச்சையே (ஸ்போர்ட்ஸ் பிரா) விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு பொருத்தமாக அமைகின்றது. ஹொக்கி மற்றும் றகர் விளையாட்டுக்களின்போது மௌத்கார்ட் எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்று ஸ்போர்ட்ஸ் பிராவும் உடற்பயிற்சிகளின்போது அணிவது அவசியமாகின்றது.
அதிகமான பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடும் போது சாதாரண பிராக்களையும் உள்ளாடைகளையுமே அணிகின்றனர். இவை அவர்களது விளையாட்டிற்கான சரியாக ஆதரவை வழங்காதபடியால் அவர்கள் வலிகளை எதிர்கொள்கின்றனர்' என அவர் எச்சரித்துள்ளார்.
'இதன்காரணமாகவே (பாடசாலைகளில்) அநேகமான யுவதிகள் உடற்பயிற்சி வகுப்புகளில் ஈடுபடுவதற்கு பயப்படுகின்றனர். அதிகமான இளம் பெண்கள் தவறான தேர்வுகளால் எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து புரிந்துகொள்கின்றார்கள் இல்லை.
சரியான பிராக்கள் மார்பகங்களின் அசைவு, வலியை குறைப்பதுடன் நீண்டகால தொய்விலிருந்தும் பாதுகாப்பளிக்கும்.
இளம் வயதில் சரியான தகவலை வழங்கும்போதே அது அவர்களது உடல் நிலையை மெருகேற்றிக் கொள்வதற்கு உறுதுணையாய் அமையும். அத்துடன் பாடசாலைகளில் அதிக விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கும் ஊக்கமளிக்கும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஜோனா ஸ்கார் இயக்க உணரிகளை பயன்படுத்தி மார்பக அமைவுகள் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். விளையாட்டுச் செயற்பாடுளின்போது சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களும் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களைப் போன்றே அதிக வலியை எதிர்கொள்கின்றனர் என்பதை அவர் இந்த ஆய்வுகளின்போது கண்டறிந்துள்ளார்.
அத்துடன் அதிவேகமாக ஓடும்போது ஏற்படும் அளவிலான மார்பக அசைவு, சாதாரணமாக ஜோக்கிங் செய்யும்போது ஏற்படுகிறது எனவும் இதனால் ஜோக்கிங் செய்யும்போதும் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது அவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago