Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறக்கும் குழந்தைகளை எதிர்காலத்தில் நல்ல தொழில் தகைமையுடன் உருவாக்கிவிட வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரினதும் எண்ண அலையில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விடயமாகும். ஆனால், பிள்ளைகள் பிறக்கும் நேரமானது பிற்காலத்தில் அவர்கள் எந்த தொழிலை தெரிவு செய்வார்கள் என்பதை தீர்மானிக்கும் என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மாதங்களில் பின் பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் அவர்கள் எந்தத் தொழிற்துறையில் ஈடுபடுவார்கள் என்பதை சுட்டிக்காட்டக் கூடும் என்பதை பிரித்தானிய தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் புள்ளிவிபரங்கள் தொடர்பான ஆய்வொன்று தெரிவிக்கின்றதாம்.
குழந்தைகள் பிறக்கும் மாதங்கள் அவர்களின் புத்திகூர்மை முதல் ஆயுட்காலம் வரையான பல விடயங்களில் தாக்கம் செலுத்துகிறது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக டிசெம்பர் மாதத்தில் குழந்தை பிறந்தால் அக்குழந்தை அதிகமாக பல்வைத்தியராக வர அதிக வாய்ப்புள்ளதாகவும் அதேபோல் ஜனவரி மாத்தில் அக்குழந்தை பிறந்தால் கடன் வசூலிப்பாளராக வர அதிக வாய்ப்புள்ளதெனவும் இருப்பார்களென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதேபோல பெப்ரவரி மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் கலைஞர்களாகவும் மார்ச் மாதம் பிறக்கும் குழந்தைகள் விமானிகளாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்.
ஏப்ரல், மே மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் தொழிற்துறைகள் பரந்த எண்ணிக்கையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கோடைக்கால கால மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிக வருமானங்களைப் பெறக்கூடிய தொழிற்சார் கால்பந்தாட்ட வீரர்களாகவோ வைத்தியராகவோ அல்லது பல் வைத்தியர்களாகவோ வருவதற்கான வாய்ப்பு குறைவாம்.
19 வகையான தொழிற்துறைகளைச் சார்ந்த பலரின் பிறந்த மாதங்களை ஆராய்ந்ததன் மூலம் ஆய்வாளர்கள் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கான காரணங்களை விபரிப்பது கடினம் எனவும் ஆனால் குழந்தைகள் பிறக்கும் மாதத்திற்கும் அவர்களின் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் விஞ்ஞான ரீதியான அடிப்படை உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
வசந்த காலத்தில் பிறக்கும் குழந்தைகளள் அல்ஸீமர், ஆஸ்துமா, முதலிய நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமாம். அவர்கள் ஏனைய மாதங்களில் பிறக்கும் குழந்தைகளைவிட வகுப்பில் குறைந்தளவு புத்திசாலிகளாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தாய் கருவுற்றிருக்கும்போது சூரிய ஒளி படுதலானது இவ் வித்தியாசங்கள் பலவற்றுக்கு தொடர்புள்ளது என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சூரிய ஒளியனது உடலிற்கு வைற்றமின் டீ யை கொடுக்கின்றது. வாழ்க்கையின் ஆரம்ப பருவத்தில் இது குறைவாக இருந்தால் வாழ்நாள் முழுதும் நீடிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியான ரஸெல் போஸ்டர் தெரிவிக்கையில் இத்தாக்கங்கள் மிகவும் சிறியதாக இருக்கும் ஆனால் அவை மிகவும் தெளிவானவை என தெரிவித்துள்ளார்.
நான் சோதிடத்திற்காக குரல்கொடுக்கவில்லை. அது அபத்தமானது. ஆனால் நாம் பருவகால இடைத்தாங்களுக்கு உட்படாதவர்கள் அல்லர்' என அவர் கூறியுள்ளார்.
xlntgson Wednesday, 07 September 2011 09:47 PM
இது விஞ்ஞானமா, விஞ்ஞான ஜோசியமா?
Reply : 0 0
Hot water Thursday, 08 September 2011 03:48 AM
ஜோதிடர்கள் இன்னும் ஒரு படி சென்று குழந்தை பிறக்கும் திகதி, நேரமும் கூட தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். கடைசியில் விஞ்ஞானிகளும் இந்த முடிவுக்குதான் வருவார்களோ?
Reply : 0 0
Thowfeek Wednesday, 14 September 2011 04:50 PM
ஒரு குழந்தை பிறக்கும்போதே அதனது ஆயுளும் அது என்ன தொழில் செய்யும் எப்படியான விடயங்களை செய்யும் என்பதை கடவுள் எழுதிவிட்டான். இவர்கள் ஒரு அனுமானமாகவே சொல்கிறார்கள். அவர்களுக்கே அவர்களுடைய எதிர்காலம் தெரியாது.. இவங்க?
Reply : 0 0
Niro Sunday, 11 December 2011 06:52 PM
Thamilarkalin ovvoru vidayankalukkum ovvoru arththm irukkum. athanai tharpothu puthiya vidayamaka araykinranar. silavarrirku kappurimayum vankividukinranar
Sothidam anupavankalin adayalam
tharpothaya arivu adayalaththukkana muyarsikal.
Reply : 0 0
mrt Monday, 28 May 2012 06:28 PM
ஆதிகாலமுதல் ஜோதிடத்தில் கணித்துள்ளதை இப்போ விஞ்ஞானமா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago