2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அளவு, வடிவத்தை கருத்திற்கொள்ளாமல் பிரா வாங்கி வீணாக்கும் பெண்கள்

Kogilavani   / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனைச் சேர்ந்த பெண்களில் சுமார் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தாம் வாங்கும் மார்பகக் கச்சைகள்  பலவற்றை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை என ஆய்வொன்றின்மூலம் தெரியவந்துள்ளது.

 

அந்நாட்டில் பெண்களில் பலர், ஷொப்பிங் செய்யும் ஆசையில் பிராக்களின் அளவு, வடிவம் என்பவற்றை கருத்திற்கொள்ளாமல் அவற்றை வாங்குவதாகவும் பின்னர் அவற்றை பயன்படுத்தாமல் ஒதுக்குவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் பிரிட்டனில்  சுமார் 156 மில்லியன் பிராக்கள் வீணாக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரா விற்பனை நிறுவனமொன்றினால் சுமார் 2000 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, பிரித்தானிய பெண்களிடம் சராசரியாக  9 மார்பக கச்சைகள் உள்ளதாகவும் ஆனால் அதில் அரைவாசிக்கும் அதிகமானவை பயன்படுத்தப்படுவதில்லை  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றில் ஒரு பங்கு பெண்கள், பொருத்தமற்ற அளவு காரணமாக தாம் அவற்றை நிராகரிப்பதாக கூறியுள்ளனர். இதேவேளை, அசௌகரியும், பொருத்தமற்ற துணிகளால் உருவாக்கப்படுதல், அவற்றை அணியும்போது வேடிக்கையான தோற்றத்தை ஏற்படுத்தல் போன்ற காரணிகளால் இவ்வாறு மார்பகக் கச்சைகளை ஒதுக்குவதாக ஏனைய பெண்கள் கூறியுள்ளனர்.

பல பெண்கள் மிகவும் தாம் தேர்வு செய்யும் மார்பகக் கச்சைகள் உடலுக்குப்  பொருத்தமில்லாதிருப்பதாக அதிருப்தி கொண்டுள்ளனர். அதேவேளை, பத்தில் ஒருவீத  பெண்களுக்கு அவர்களுக்குத் தேவையான மார்பகக் கச்சைகளின்  சரியான அளவு தெரியவில்லை. மற்றும் மூன்றில் ஒரு  சதவீதத்தினர் சரியாக அளவிடாதவர்களாக உள்ளனர்.

74 வீதமான பெண்கள் மார்பக கச்சைகளை புதிதாக வாங்கும்போது அளவு பொருந்துமா என சோதிப்பதில்லை.  ஏனெனில் அவர்கள் கூட அவர்களது மார்பகங்களை சரியாக அளவிடப்படுவது குறித்து  சங்கடப்படுகின்றனர். நான்கில் ஒரு பங்கினர் தெரிவிக்கையில் தற்போது தாம்  அணியும்  மார்பகக் கச்சைகள் பொருத்தமாக அமையவில்லையென தெரிவித்துள்ளனர்.

அதிகமான பெண்கள் ஒரே அளவுடைய 3 மார்பக கச்சைகளை சுழற்சி முறையில் அணிவதுடன் அரைவாசிக்கும் மேற்பட்ட பெண்கள் வெவ்வேறு அளவுடைய பல வகையான மார்பகக் கச்சைகள் அணிவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் 25 சதவீதமானோர் தமது மார்பகங்கள் பெரிதாக தோற்றமளிக்கச் செய்வதற்காக  மிகவும் சிறிய அளவுடைய மார்பகக் கச்சைகளை அணிவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

57 வீதமான பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடும்போது தாம் அணியும் பிரா பொருத்தமானதா என்பது குறித்து கரிசனை கொள்வதில்லையெனத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • suthan Sunday, 08 July 2012 08:11 PM

    எனக்கு இது பிடிக்கல்ல‌

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .