2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

ஒஸ்கார் விருது பெற்ற இயக்குநர் மரணம்

Kogilavani   / 2014 மே 14 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவீடனைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மாலிக் பென்ட்ஜொலல் தனது 36 வயதில் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சர்ச்சிங் பார் சுகர் மேன் என்ற தனது இசை வீடியோ ஆவணப் படத்துக்காக 2013-ம் ஆண்டு ஒஸ்கார் விருது வென்றவர் பென்ட்ஜொலல்.

1977இல் பிறந்த பென்ட்ஜொலல், தொன்னூறுகளில் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் ஸ்வீடன் வானொலியில் பணியாற்றினார். ஒரு பயணத்தின்போதுதான் சர்ச்சிங் பார் சுகர் மேன் என்ற படத்துக்கான கதைக்கரு அவருக்குக் கிடைத்தது.

அந்தப் படத்தை முடிக்க அவருக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் அதற்கான பலன் கிடைத்துவிட்டது. 1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்கர் வென்ற ஸ்வீடிஷ்காரர் என்ற பெருமையைப் பெற்றார் பென்ட்ஜொலல்.

அவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .