2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

பழம்பெரும் திரை இசையமைப்பாளர் இராமமூர்த்தி காலமானார்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழம்பெரும் திரை இசையமைப்பாளர் டி.கே.இராமமூர்த்தி இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார்.

மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டி.கே.இராமமூர்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்.

பழம்பெரும் திரை இசையமைப்பாளர் டி.கே.இராமமூர்த்தியின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மிகச் சிறந்த வயலின் கலைஞரான டி.கே.இராமமூர்த்தி, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து முடிசூடா மன்னனாக விளங்கினார்.

மேலும், இவர் தனியாகவும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 'நான்' திரைப்படத்தில் வரும் 'அம்மனோ சாமியோ' என்ற பாடலுக்கு இவர் தனியாக இசையமைத்துள்ளார்.

இவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் இரசிகர்களின் மனதில் பசுமையாக நிலைத்து நிற்கின்றன. எம்.ஜி.ஆர். நடித்த 'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் 'கண்போன போக்கிலே கால் போகலாமா' என்ற பாடலில் வரும் வயலின் இசைக்குச் சொந்தக்காரர் டி.கே.இராமமூர்த்தி ஆவார். 'புதிய பறவை' படத்தில் இவரது பங்களிப்பில் உருவான 'எங்கே நிம்மதி;' என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது என அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். (தட்ஸ்தமிழ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .