2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

முன்னாள் குத்துச்சண்டை வீரர் சுடப்பட்டார்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்தின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஜமி மூர், ஸ்பெயினில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டுள்ளார். கால் மற்றும் இடுப்புப் பகுதியில் இரண்டு தடவைகள் இவர் சுடப்பட்டுள்ளார். சத்திர சிகிச்சையின் பின்னர் மூர், ஆபத்தான நிலையில் இல்லை எனவும் நிரந்தர உபாதைகள் அவருக்கு ஏற்பட வாய்ப்புகள் இல்லை எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 
 
35 வயதான ஜிமி மூர், இங்கிலாந்தை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் மத்தியூ மெக்லினுக்கு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இங்கிலாந்தவரான மத்தியூ மெக்லின், ஸ்பெயின் மார்பெலா பகுதியில் குடியேறியுள்ளதுடன் சொந்தமாக ஜிம் கூடம் ஒன்றையும் அமைத்துள்ளார். இவருக்கு பயிற்சிகளை வழங்கும் போதே ஸ்பெயின் நகரப் பகுதியில் வைத்து மூர் சுடப்பட்டுளார். ஆயுத பாதுகாப்புடன் மூர் ஸ்பெயின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 
 
இலகு மத்திய எடைப் பிரிவுக்கு (Light Middleweight) உட்பட்ட பிரிவில் 37 போட்டிகளில் விளையாடி 32 போட்டிகளில் ஜமி மூர் வெற்றி பெற்றுள்ளார். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் இவர் என்பதுடன் ஐரோப்பிய சம்பியன் பட்டம் வென்ற வீரரும் ஆவர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .