2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் காலமானார்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர், புற்று நோயால் நேற்று வியாழக்கிழமை மரணமடைந்தார். பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுருளி மனோகர்.
 
கடந்த ஆண்டு ‘இயக்குநர்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். கிங்கொங், போண்டாமணி, ஜாஸ்பர், மனோபாலா, பாலு ஆனந்த், குண்டு கல்யாணம், பாண்டு, அல்வா வாசு, குள்ளமணி, பாவா லட்சுமணன், தேவதர்ஷினி, ஜெய்கணேஷ், ஜெயமணி என தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை பட்டாளத்தையே இந்தப் படத்தில் நடிக்க வைத்தார் சுருளி. இவர்களுடன் சுருளி மனோகர் ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கவும் செய்தார். 
 
இந்நிலையில், சென்னையில் அவர் நேற்று மரணமடைந்தார். வெகு நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சுருளி மனோகர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துவிட்டார். மறைந்த சுருளி மனோகருக்கு, மூன்று மகள்கள் உள்ளனர். 
 
சுருளி மனோகர் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும், மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .