Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 மார்ச் 16 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் முன்கூட்டியே கனவு கண்ட மகளால் தந்தையொருவர், அதிர்ஷ்ட இலாபச் சீட்டிலுப்பில், மிகப்பெரிய பரிசுத் தொகையை பெற்றுள்ளார்.
கனடாவின் அஜாக்ஸ் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பணியாளரான கெரி டோலா என்பவரே, லொட்டோ மெக்ஸ் எனும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டிலுப்பில் ஒரு இலட்சம் டொலர்களை பரிசாக வென்றுள்ளார்.
இதுபற்றி, கெரி டோலா தெரிவிக்கையில், பரிசு வென்றெடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக தனது மகள், அதிர்ஷ்ட இலாபச் சீட்டிலுப்பில் பரிசு வெல்வதுபோல் கனவு கண்டுள்ளதாகவும், அதன் பின்னர் அவர் வாங்கிய சீட்டுக்கு பரித்தொகை கிடைத்ததாகவும், கனவு நனவாகும் என்று தான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடுவதாகவும், சில முதலீடுகளை செய்வதிலும் கவனம் செலுத்த உள்ளதாகவும் டோலா தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .