2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தொப்பி ஒன்றின் விலை இத்தனை கோடிகளா?

Freelancer   / 2024 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல ஹொலிவுட் திரைப்படமான இண்டியானா ஜோன்ஸில் பயன்படுத்தப்பட்ட தொப்பி ஒன்று பல கோடிக்கு ஏலத்தில் விற்பனையான சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

80கள், 90களை சேர்ந்தவர்களுக்கு விருப்பமான ஹொலிவுட் படங்களில் இண்டியானா ஜோன்ஸ் இருக்கும். 1984ஆம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான இண்டியானா ஜோன்ஸ் படம்தான், இண்டியானா ஜோன்ஸ் பட வரிசைகளுக்கு தொடக்க புள்ளி. இந்த முதல் படமம் ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த டெம்பிள் ஒப் டூம்’ (Indiana Jones and the Temple of Doomme).

இந்த படத்தின் மூலம் இண்டியானா ஜோன்ஸாக அறிமுகமான ஹாரிசன் ஃபோர்ட், பின்னர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இண்டியானா ஜோன்ஸ் என்றால் ஹாரிசன் ஃபோர்ட்தான் என்றே மனதில் பதிந்துவிட்டார்.

கடைசியாக வந்த டயல் ஆப் டெஸ்டைனி படத்திலும் ஹாரிசன் ஃபோர்டே இண்டியானா ஜோன்ஸாக நடித்திருந்தார்.

அப்படிபட்ட இண்டியானா ஜோன்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட தொப்பி ஒன்று சமீபத்தில் ஏலத்துக்கு வந்துள்ளது. டெம்பிள் ஆப் டூம் படத்தில் ஹாரிசன் பயன்படுத்திய இந்த தொப்பி, அவரது டூப் கலைஞரான டீன் பெராடினி என்பவரிடம் இருந்தது.

சமீபத்தில் பெராடினி மறைந்துவிட்டதால் இந்த தொப்பி ஏலத்திற்கு வந்தது. இந்திய மதிப்பில் இந்த தொப்பி சுமார் ரூ.5.28 கோடிக்கு விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X