2025 மே 01, வியாழக்கிழமை

பிடித்த நபருடன் வாழலாம்

Mayu   / 2024 பெப்ரவரி 22 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்ற கலாச்சாரம் பெருகி வருவதை பார்க்கிறோம். ஆனால் கிராமப்புறங்களில் குறிப்பாக பழங்குடியினரில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? இந்தியாவில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் நடைமுறையில் இருக்கும் பழங்குடியினர் குழுவொன்று உள்ளது.

இந்த பழங்குடியினரில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் மிகவும் பொதுவானது என்று கூறப்படுகிறது. அதாவது பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆண்களுடன் தங்கி உடலுறவு கொள்ளலாம். குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம்.  இந்த உறவுகளின் மூலம் அவர்கள் தங்களுக்கு ஏற்ற ஜோடியை கண்டுபிடிப்பார்களாம்.

இதற்கமைய, கராசியா பழங்குடி என்ற பழங்குடியினர் குழு,  ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர்.

இந்த பழங்குடியினரின் பல பெண்கள் திருமணத்திற்கு முன்பே லிவ்-இன்-ற்கு தாயாகிறார்கள். மேலும், அவர்கள் விரும்பும் ஆண்களை கணவனாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

இந்த பழங்குடியில் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்கின்றனர். மேலும், பெண்களும் திருமணத்திற்கு முன்பே குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர்.

தங்களுக்கு விருப்பமான ஆண் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு என்பது அங்கு பரவலாக பார்க்கப்படுகிறது.

இங்கு ஒரு நிகழ்வு நடக்கிறது. அந்த நிகழ்வில், இளைஞர்கள் மற்றும் பெண்கள் கூடி, அவர்கள் விரும்பும் ஒருவருடன்,  தனியாக வாழத் தொடங்க முடிவெடுக்கிறார்கள்.

பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே உடலுறவு கொள்ளலாம். அதன்பின், ஊர் திரும்பிய பெற்றோர், பிரமாண்டமான முறையில் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கினர்.

இருப்பினும், அவர்கள் விரும்பினால் திருமணமாகாமலும் பிரிந்து செல்லலாம். இந்த பழங்குடியினரிடையே பல ஆண்டுகளாக இதேபோன்று ஒரு வழக்கம் உள்ளதாக தெரிகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் வேறு இடத்திற்குச் சென்றுள்ளனர். அவர்களில் மூன்று பேர் இந்திய மரபுப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர், ஆனால் ஒருவர் மட்டும் திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் லிவ்-இன் உறவைத் தொடங்கியுள்ளார்.

அந்த மூன்று சகோதரர்களுக்கும் குழந்தைகள் இல்லை எனவும் ஆனால் நான்காவது சகோதரருக்கு குழந்தை இருந்ததால் அப்போதிலிருந்து அங்கு லிவ்-இன் வழக்கம் தொடங்கியதாக கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .