Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 ஜனவரி 10 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேசத்தில், திருமணத் தினத்தன்று மணமகனின் இளைய சகோதரரை மணமகள் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் அரியானா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் திருமணம் நடைபெற்று சிறிது நேரத்திலேயே அங்கு பொலிஸாருடன் வந்த மணமகனின் முதல் மனைவி தன்னிடம் எதுவும் தெரிவிக்காமல் 2-வது திருமணம் செய்துள்ளார் என கணவர் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
அத்துடன் தங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளதாகவும், 2 குழந்தைகள் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
இதனால், திருமண வீடு கலவர வீடானது. இதன்பின்னர், பொலிஸார் இரு தரப்பினைரையும் அஸ்மோலி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து மூத்த பஞ்சாயத்து தலைவர்கள் சிலர் காவல் நிலையத்திற்கு சென்று பரஸ்பர ஒப்புதலுக்காக பேச்சுவார்த்தை நடத்தி, முடிவு செய்தனர்.
இதன்படி, 2ஆவது திருமணம் செய்த மனைவியை மணமகன் விவாகரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மணமகள், மணமகனின் இளைய சகோதரரை திருமணம் செய்ய வேண்டும் என முடிவானது.
இதனை தொடர்ந்து, மணமகனின் இளைய சகோதரரை மணமகள் கரம்பிடித்து அவருடன் சென்றார்.
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago