Editorial / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீன மயானம் ஒன்றில் பகிரங்கமாகப் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக 58 வயதுடைய தமிழ் ஆடவர் ஒருவருக்கும், 37 வயதுடைய பெண் ஒருவருக்கும் மலேசிய நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மலேசியாவின் பினாங்கு பகுதியில் உள்ள சீன மயானம் ஒன்றில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டப்பகலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 58 வயதுடைய ஜெகதீசன் மற்றும் 37 வயதுடைய ஹலிலா அபு பக்கர் ஆகிய இருவரும் மயானப் பகுதியில் தகாத முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர் தனது அலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார். இந்தக் காணொளி மலேசியாவில் வைரலாகப் பரவியதுடன், பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டமை மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் தலா ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். பொது இடங்களில் இவ்வாறான ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இதுவொரு பாடமாக அமைய வேண்டும் என்றும் நீதிமன்றம் இதன்போது குறிப்பிட்டது.
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago