Editorial / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனில் பார்க்கின்சன்ஸ் நோயுடைய (Parkinson's disease) பெண்ணின் மூளையில் மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருந்தபோது அவர் கிளாரினெட் (clarinet) இசைக்கருவியை வாசிக்கத் தொடங்கினார்.அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
65 வயது டெனீஸ் பேக்கன் (Denise Bacon) முன்னாள் பேச்சுப் பயிற்றுவிப்பாளர்.
2014ஆம் ஆண்டில் அவருக்குப் பார்க்கின்சன்ஸ் நோய் இருப்பதாகக் கண்டறியபட்டது.
நோயின் காரணமாக அவர் நடக்க, நீந்த, ஆட, கிளாரினெட் வாசிக்கச் சிரமப்பட்டார்.
நோயின் கடுமையைக் குறைக்க அவர் மூளை அறுவைச் சிகிச்சைக்குச் சென்றார்.
மருத்துவர்கள் திருவாட்டி பேக்கனின் தலைப்பகுதிக்கு மரமரப்புக் கொடுத்து, மூளையை ஆழமாகத் தூண்ட மின்சாரச் சிகிச்சையை அளித்தனர்.
சிகிச்சையின்போது விழிப்புடன் இருந்த திருவாட்டி பேக்கனின் விரல்கள் அசைந்துகொடுத்ததால் உடனே அவர் கிளாரினெட்டை வாசிக்கத் தொடங்கினார்.
அது சிகிச்சையின் வெற்றிக்கான அறிகுறி என்று சிகிச்சையை நடத்திய பேராசிரியர் கூறினார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago